“பூட்டிய வீட்டுக்குள்” வாலிபர் தூக்கில் தொங்கினார் !! நடந்தது என்ன ??

“பூட்டிய வீட்டுக்குள்” வாலிபர் தூக்கில் தொங்கினார் !! நடந்தது என்ன ??

பூட்டிய வீட்டுக்குள்- வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். திருமணம் ஆகாத கவலையின்!! காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி, 

சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கம், சுபஸ்ரீ நகர் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தவர் வெங்கடேசன் (வயது 30). தையல்காரரான இவருக்கு” மதுஅருந்தும்” பழக்கம் இருந்ததாக விசாரணையில் தெறியவந்துள்ளது .

கடந்த 2 தினங்களாக இவரது வீடு பூட்டியே கிடந்தது. வீட்டை விட்டு அவர் வெளியே வரவில்லை. இதற்கிடையில் நேற்று அவரது வீட்டில் இருந்து அதிகம் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி மாங்காடு காவலருக்கு தகவல் கூறப்பட்டது

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பூட்டிய வீட்டுக்குள் வெங்கடேசன், தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல் சிதைத்த அழுகிய நிலையில் கிடந்தது. எனவே அவர் 2 நாட்களுக்கு முன்பே தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதாக கூறப்படுகிறது .

அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவலர் , மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில் குடிப்பழக்கத்துக்கு ஆளான வெங்கடேசனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் ஏற்பட்ட கவலையின் ஏற்கனவே சில முறை தற்கொலைக்கு முயன்ற நிலையில் தற்போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

எனினும் அவரது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற பல கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் பாருங்க:  திருமணத்தில் இளைஞருடன் மணப்பெண் போட்ட செம டான்ஸ்