பூண்டை இவ்ளோ ஈஸியா உரிக்கலாமா?

பூண்டை இவ்ளோ ஈஸியா உரிக்கலாமா?

பூண்டை இவ்ளோ ஈஸியா உரிக்கலாமா? என்று கேட்கும் அளவுக்கு ஒரு வீடியோ இணையத்தில் வெளியகை செம வைரலாக பரவி வருகிறது.

காய்கறி வேட்டுவதில் மிகக் கடினமான வேலை என்றால் சின்ன வெங்காயம் உரிப்பதும், பூண்டு உரிப்பதும் தானே. சின்ன வெங்காயத்தையாவது கத்தியால் கீறி தோலை உரித்துவிடலாம். இந்தப் பூண்டை அப்படியும் உரிக்க முடியாது. தோலோடு சமையலில் போட்டால், கரையாமல் வாயில் அப்படியே மாட்டிக்கொள்ளும். எவ்வளவு பெரிய நிபுணராக இருந்தாலும் மற்ற காய்கறிகளைவிட பூண்டு உரிப்பது நேரம் எடுக்கும் என்பதை ஒத்துக்கொள்வார்கள்.

d1-1-5424915

சமீபகாலமாக காய்கறி, பழங்களை சுலபமாக வெட்டுவது, உரிப்பது எப்படி என்ற வீடியோக்கள் மக்கள் இடையே பிரபலமாகி வருகிறது. அந்த வீடியோக்களை எல்லாம் ஓரங்கட்டி நான்கே நாளில் 22 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து இருக்கிறது இந்தப் பூண்டு உரிக்கும் வீடியோ!

அதுவும் யூடியூபில் கூட இல்லை, டிவிட்டரில்… வெறும் 25 நொடிகள் கொண்ட இந்த வீடியோவில் யார் என்னவென்று முகம் கூட இல்லை. வெறும் இரண்டு கைகள், மொத்தமாக ஒரு பூண்டை எடுத்து அனாயசமாக ஒவ்வொரு பல்லையும் கத்தியால் எடுக்கிறது, அதுவும் மிகச் சுலபமாக!

அந்த வீடியோவைப் பதிவிட்டிருக்கும் பெண், கொரியன் உணவைச் சமைக்கும் யாரோதான் இப்படி ஒரு ஈஸியான வழியைக் கண்டுபிடித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

d-4-5416324

இந்த வீடியோவை அந்தப்பெண் பதிவேற்றிய நான்கே நாட்களில் 22.4 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. பதினோறாயிரம் பேர் இதில் கமெண்ட் செய்திருக்கிறார்கள். 1.45 லட்சம் பேர் ரீட்வீட் செய்திருக்கிறார்கல், 4.41 லட்சம் பேரு இதனை லைக் செய்திருக்கிறார்கள்.

வீடியோ பார்த்த பலரும் வாழ்நாளில் நான் பூண்டு உரிப்பதற்காக செலவிடும் நேரத்தை இந்த வீடியோ மிச்சப்படுத்தி இருக்கிறது என்றும், நேரத்தை விட எனது நகத்தைப் பாதுகாத்திருக்கிறது என்றும் என் வாழ்க்கையையே மாத்திவிட்டீர்கள் என்று பாராட்டி வருகிறார்கள்.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்