பூ விற்கும் பொறியியல் பட்டதாரி!…. சுய தொழிலில் சாதித்த தமிழன்..!

பூ விற்கும் பொறியியல் பட்டதாரி!…. சுய தொழிலில் சாதித்த தமிழன்..!

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

பொறியியல் படித்திருந்தாலும் தற்போது பூக்கடை நடத்தி ஆயிரக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் கரூரை சேர்ந்த இளைஞர்.தங்களுடைய படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் மிக குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் இளைஞர்கள் ஏராளம்.

இதனால் பலரும் தங்களுக்கு தெரிந்த சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.அப்படி பூ கட்டத் தெரிந்த கரூரை சேர்ந்த வாலிபரான கார்த்திக் என்பவர் சொந்த தொழில் மூலம் ஆயிரக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார்.

இவர் வாங்கிய சம்பளம் பற்றாக்குறையாக இருந்ததால் இந்த யோசனை உதித்ததாக தெரிவிக்கிறார்.நண்பர்களின் உதவியுடன் கடையை நடத்தி வரும் கார்த்திக்குக்கு தொடக்கத்தில் மிக குறைவான அளவே வருமானம் வந்ததாக தெரிவிக்கிறார்.

பூ கட்டி விற்பது குடும்ப தொழிலாக இருந்தாலும் கஷ்டப்பட்டு கடன் வாங்கி பொறியியல் படிக்க வைத்த மகன் இத்தொழில் செய்வதற்கு எதிர்ப்பு எழுந்ததாம்.இருப்பினும் எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் ரூ.1 லட்சம் முதலீட்டில் நண்பர்கள் கைகோரக்க தொழிலை தொடங்கியுள்ளார்.

முதலில் கல்யாண மாலை, சடை அலங்காரம் என தொடங்கிய தொழிலில் தற்போது மேடை அலங்காரம், கோவில் பூஜைகளுக்கு பூ வரை செய்து வருகிறாராம்.மேலும் ஓன்லைனில் தன்னுடைய தொழிலை அறிமுகப்படுத்தியவர், மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.இதோடு இல்லாமல் அடுத்ததாக ஹொட்டல், டிராவல்ஸ் என தொழிலை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளாராம் கார்த்திக்.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!