பைக் திருடனை கஷ்டப்பட்டு மடக்கி பிடித்த காவலர்கள்

பைக் திருடனை கஷ்டப்பட்டு மடக்கி பிடித்த காவலர்கள்

பைக் திருடனை கஷ்டப்பட்டு மடக்கி பிடித்த காவலர்கள் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவை பெற்ற தற்போது வைரலாகி வருகிறது.

திரைப்படங்களில் அதிகம் போலீஸ் என்றாலே மோசமானவர்கள் என்ற பார்வையிலேயே அதிக படங்கள் வெளியாகி வருகின்றன. இயல்பாகவே போலீஸ் என்றால் மக்கள் மத்தியில் நல்லபெயர் இருப்பதில்லை. ஆனால் அவர்களில் பலரும் கடமையை தவறாமல் செய்கின்றனர் என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. அப்படி நடக்கும் சம்பவங்களை நாம் பாராட்டுவதும் இல்லை.

அப்படிதான் சம்பவத்தன்று ஒரு பைக் திருடன் பைக் திருட முயல்கிறான். அப்போது அங்கு வந்த இரண்டு காவலர்கள் ஏதோ தவறாக நடப்பதை உணர்கின்றனர். அப்போது மறைந்திருந்த திருடன் காவலர்கள் அங்கிருந்து சென்றதும் பைக்கை திருடிவிட்டு ஓடுகிறான். அப்போது சரியான தருணத்தில் அங்கு வந்த இரண்டு காவலர்கள் அந்த பைக் திருடனை பிடிக்க முயற்சித்தனர் அப்போது காவலர்களிடம் இருந்து தப்பிக்க பைக்கை வேகமாக இயக்கிய திருடன் காவலர் கிடுக்கிப்பிடியில் தவறிக் கீழே விழுகிறான். அந்த இரு காவலர்களும் அந்த திருடனை கஷ்டப்பட்டு மடக்கிப் பிடித்த வீடியோ தான் இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் அந்த காவலர்களை பாராட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் பாருங்க:  நம் முன்னோர்கள் கலை திறமையை பாருங்க!! தூண் மீது சுழலும் கல்! கோவிலில் இருக்கும் அதிசயம் பாருங்கள்!