மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு இவ்வளவு நல்ல மனசு இருந்ததா? பலருக்கும் தெரியாத தகவல்..!

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு இவ்வளவு நல்ல மனசு இருந்ததா? பலருக்கும் தெரியாத தகவல்..!

சில்க் சுமிதா என்றால் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் அவ்வளவு பிரபலம். மறைந்து 24 ஆண்டு-கள் ஆனாலும், இன்றும் நடுத்தர வயதுக்காரர்களுக்கு கனவுகன்னி என்றால் அது சில்க் சுமிதா தான்!

இப்போதெல்லாம் நாயகிகளே கவர்ச்சி காட்டினால் தான்பீல்டில் நிற்க முடியும் என்னும் காலம் வந்துவிட்டது. ஆனால் சில்க் சுமிதா காலத்தில் கவர்ச்சிக்கு தனி போஷனும், அவர் போன்ற தனி நடிகை-களும் இருந்தனர், அதில் புகழின் உச்சத்தில் இருந்தார் சில்க். வண்டிச்சக்கரம் என்னும் படத்தின் மூலம் அறிமுகமான சில்க் 16 ஆண்டு-கள் நடித்தார். யாரும் எதிர்பார்க்காத வண்ணம், 1996ல் தன் அப்பார்ட்மெண்டில் தூக்கு போட்டு த.ற்கொ.லை செய்து கொண்டார் சில்க் சுமிதா.

அவர் மறைந்தாலும் இன்று அவர் படங்-கள் அவர் புகழை பேசிக்கொண்டிருக்கின்றன. சில்க் சுமிதா என்றாலே நமக்கெல்லாம் அவரது கவர்ச்சி தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர் பலருக்கும் ஓசையின்றி உதவி-களும் செய்திருக்கிறார். 1987 ஆம் ஆண்டில் லண்டன், ஜெர்மனி உள்பட நான்கு நாடுகளுக்கு ஸ்டார் ஷோ நடத்த நடிகை சில்கை அழைத்தனர். தொடர்ந்து தன்னை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதை உறுதி செய்தால் வருவதாக பாலன் என்னும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் சொல்லியிருக்கிறார். இதற்கு ஒரு தொகையை சில்கிற்கு போய் நிகழ்ச்சி முடிந்து வந்ததும் சில்க்கிடம் கொடுத்திருக்கிறார்.

அதற்கு அவரோ இந்தத் தொகை எனக்கு வேண்டாம். அங்கு மக்-கள் என்னிடம் காட்டிய அன்பும், அவர்-கள் கொடுத்த பரிசுப்பொருள்-களும் போதும் எனச் சொல்லியிருக்கிறார். இதேபோல் எம்.ஜி.ஆரைப் போலவே தன்னை நம்பி வந்தவர்களுக்கு இல்லை என்றே சொல்லாமல் தான் சம்பாதித்த பணத்தை வாரி வழங்கியிருக்கிறார். ஒருமுறை அவர் வீட்டில் வேலை செய்யும் பெண் தன் மகளுக்குத் திருமணம் எனச் சொல்ல பீரோவில் இருந்த நகைகளை கணக்கே பார்க்காமல் எடுத்துக் கொடுத்திருக்கிறார் சில்க்சுமிதா. கவர்ச்சி மட்டுமல்லாது பல கலக்கலான உதவிகளையும் செய்திருக்கிறார் சில்க்.

இதையும் பாருங்க:  புஷ்பா பட பாடலுக்கு ஆச்சு அசலாக ராஷ்மிகா போல் நடனமாடிய இளம்பெண்!! தாவணியில் போட்ட கலக்கல் டான்ஸ்! மிஸ் பண்ணாம பாருங்க...

கருத்தை சொல்லுங்கள் ...