மாணவிக்கு வகுப்பறையில் தாலிகட்டிய மாணவன் : நண்பன் எடுத்த வீடியோவால் வந்தது வினை – வீடியோ

ஆந்திராவில் +1 வகுப்பு படிக்கும் மாணவிக்கு சகமாணவன் வகுப்பறையில் தாலி கட்டிய வீடியோ காட்சி ஓன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரொனா வைரஸ் பரவல் காரணமாக, ஆந்திராவில் மூடப்பட்டிருந்த பள்ளி வகுப்புகள் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், மாணவிகள் பள்ளிக்கு வந்து சென்றனர்.

இருந்தாலும் பள்ளி திறந்ததன் காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி அருகே அரசு மேல் நிலைப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு (+ 1) படிக்கும் மாணவன் வகுப்ப அறையில் வைத்து சக மாணவிக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதை மாணவனின் நண்பன் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இப்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, புகைப்படங்கள் பள்ளி நிர்வாக கவனத்திற்கும் சென்றுள்ளது.
இதனால் திருமணம் செய்து கொண்ட 2 பேரையும், மற்றும் அவர்களுக்கு உதவிய மற்றொரு வீடியோ எடுத்த மாணவனையும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு படிக்க அனுப்பினால் இப்படியா செய்வது என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பறக்கின்றன . செய்த தவறால் படிப்பையும் தொடரமுடியாமல் இருக்கிறது அந்த காதல் ஜோடி