மீனாவிடம் சிக்கிய பிரசாந்த் – பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

மீனாவிடம் சிக்கிய பிரசாந்த் – பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தற்போது பல பிரச்சனைகளுக்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்று சேர்ந்துள்ளது.மேலும் மூர்த்தி மற்றும் கண்ணனுக்கு குழந்தையும் பிறந்துள்ளது,இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்,பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கட்டும் புதிய வீட்டின் கிரஹப்பிரவேசம் நடைபெற்று உள்ளது.அனைவரும் சந்தோசமாக உள்ளனர்.பிரசாந்த் மாமனார் மற்றும் அவரது நண்பரை கொலை செய்ய முயற்சிக்கிறார் மேலும் தன்னையும் தாக்கி கொண்டு பழியை தூக்கி ஜீவா மேல் போடுகிறார்,அங்கு போலீஸ் வரவே ஜனார்த்தன் உயிரோடு இருப்பதை தெரிந்துகொண்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்,அங்கு பிரசாந்த் அழுது நாடகம் போடுகிறார்.பிரசாந்த் ஜீவா மேல் போட்ட பழியை நம்பிய மீனா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்கிறார்.
தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில்,ஆளில்லா நேரத்தில் பிரசாந்த் ஜனார்த்தனை கொள்வதற்கு உள்ளே வருகிறார்.அந்த சமயத்தில் மீனா வரவே அவர் அங்கிருந்து கிளம்புகிறார் தற்போது பிரசாந்த் மீது மீனாவுக்கு சந்தேகம் வர தொடங்கியுள்ளது.ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.