மீன் சாப்பிட்டால் புற்றுநோய் வராது : அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

மீன் சாப்பிட்டால் புற்றுநோய் வராது : அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

மீன் சாப்பிட்டால் புற்றுநோய் வராது என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார் .

உலகில் மீனை விட சிறந்த உணவு எதுவும் இல்லை எனவும், மீன் உண வை சாப்பிட்டால் புற்று நோய் வராது எனவும் தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித் துள்ளார்.

சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன், வீராணம் ஏரியில் பல்வேறு வகையான மீன் வகைகளை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்து பேசிய மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கட்லா, ரோகு,  ஜெயந்தி ரோகு, கெண்டை உள்ளிட்ட மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதாகவும், வீராணம் ஏரியில் நவீன ரக மீன் வகைகளை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந் து பேசிய அமைச்சர் ஜெயக் குமார், உலகத்தில் மீனை விட சிறந்த உணவு எதுவும் இருக்க முடியாது எனவும், மீன் சாப் பிட்டால் கண் நன்றாக தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் பாருங்க:  இப்படி ஒருஅக்கா கிடைத்தால் அது வரம்!

Related articles