மும்மொழிக் கொள்கைக்கு அதிமுக எம்எல்ஏ வரவேற்பு!

மும்மொழிக் கொள்கைக்கு அதிமுக எம்எல்ஏ வரவேற்பு!

புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கையை வரவேற்பதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில், குறிப்பாக அதில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை குறித்து பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் அதை வரவேற்று குன்னம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன் பேசியிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முன்னதாக, மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே நடைமுறைபடுத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முதல்வர் ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் அரநரை என்ற பகுதியில் நூலகம் ஒன்றை திறந்து வைத்து பேசிய ஆர்.டி.ராமச்சந்திரன்“தனது மகள் தனியார் பள்ளி ஒன்றில் இந்தி படிப்பதாகவும், தனது கட்சி மும்மொழி கொள்கையை எதிர்ப்பதாலேயே, தானும் அதை எதிர்த்து மக்களை ஏமாற்ற விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டப்பேரவையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ இந்தியை எதிர்ப்பதாலோ, அல்லது வேறு ஒரு மூன்றாவது மொழியை எதிர்ப்பதாலோ எந்த தாக்கத்தையும் எதிர்கொள்ளவில்லை. ஆனால், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று தெரிவித்தார். அதோடு, தான் தெரிவித்தது தனது சொந்த கருத்து என்றும், அரசியல்வாதிகள் தங்கள் வாக்குவங்கிக்காக மும்மொழிக்கொள்கையில் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று பேசினார்.

“எனது மகளை இந்தி படிக்க சொல்லி வளர்க்கிறேன்; என்னால் பொதுவெளியில் இந்தியை எதிர்க்கமுடியாது; மும்மொழிக் கொள்கை மீதான தங்களது கருத்துகளை ஆசிரியர்களும், மாணவர்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் புதிய கல்விக் கொள்கை மீதான பொதுமக்கள் கருத்து கேட்பு முகாமில் தெரிவிக்கவேண்டும்” என்று ஆர்.டி.ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் பாருங்க:  அரசரவைக்கும் வகையில் டிரம்ஸ் இசைத்து அசத்திய இளம்பெண்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...