மேடையில் நடனமாடிய மேற்கு வாங்க முதல்வர் மம்தா பனர்ஜி

மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் வங்க சங்கீத மேளா 2020 என்ற இசை நிகழ்ச்சியின் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில், முதல் மந்திரி மம்தா பனர்ஜி கலந்து கொண்டு சிறப்பித்து பேசினார்.
அவர் பேசும்பொழுது, இசை க்கு எல்லை கள் என்பது கிடையாது. பிரிவினைகளில் இசை குழுவினர் நம்பிக்கை கொள்ள கூடாது என நான் வேண்டி கேட்டு கொள்கிறேன். நம்முடைய முகம், நடை உடை பாவனை கள் மற்றும் நிறங் கள் வேறுபட்டவை. எனினும், நாம் அனைவரும் ஒன்றே.
நாம் எல்லோரும் ஒரு குடும்பம். அதுவே மனித இனம். பிரிவினையை விரும்புபவர்களு க்கு எதிராக கடுமையாக போராடுங் கள். அதற்காக பயப்பட வேண்டாம் என கூறினார். இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில், முதல் மந்திரி மம்தா பனர்ஜி மேடையில் நடனம் ஆடி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.
நடப்பு டிசம்பர் மற்றும் ஜனவரியில், விழிப்புணர்வை உருவாக்க 630 இசை நிகழ்ச்சி கள் நடத்தப்படும். சமூக இடைவெளியை உறுதி செய்ய நாம் விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.