ராட்சசன் பட குழந்தையா இது !! அம்மாடியோவ் !! வைர லாகும் புகைப்படம்

தமிழ் சினிமா வில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் நடிப் பில் லோகேஷ் கனக ராஜ் இயக்க-த்தில் மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது ஆனால் கொரோனா காரணமாக இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிக்போய்கொண்டே போகிறது, இந்த திரைப்படத்தில் இருந்து ஏதாவது அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தநிலையில் தளபதி விஜய் நடிப்பில் 2014ஆம் ஆண்டு நேசன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் ஜில்லா. இந்த திரைப்படத்தில் மோகன்லால், காஜல் அகர்வால் நடித்து இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் படத்திற்கும் டி இமான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.
50 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் 85 கோடி வரை வசூல் செய்தது, ஜில்லா திரைப்படத்தில் குண்டு வெடித்த இடத்திலிருந்து ஒரு குழந்தை விழும் அந்த குழந்தையை காப்பாற்றிய விஜய் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பார்.
அந்தக் குழந்தை வேறு யாருமில்லை ரவீணா தாஹா தான் இவர் ஜில்லா திரைப்படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலின் ராட்சசன் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இவர் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வரும் பூவே பூச்சூடவா என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது