‘லாக்டவுன்’-ல் புது தொழிலில் இறங்கிய வரலெட்சுமி

‘லாக்டவுன்’-ல் புது தொழிலில் இறங்கிய வரலெட்சுமி

வரலெட்சுமி சரத்குமார் போடா போடி படம் வாயிலாக அறிமுகமானவர், இன்று ஹீரோயின் மட்டு மன்றி கதா பாத்திரத்துக்கு முக்கியதுவம் கொடுக்கும் ரோல்களில் நடித்து வருகிறார். கொரோனா வின் தாக்கத்தின் காரணமாக பல பிரபலங்களை போல் இவரும் வீட்டிலேயே தான் முடங்கிக் கிடக்கிறார்.

ஹீரோக் கள் பலர் ஜிம்மே கதி என கிடக்க, ஹீரோயின்கள் யோகா, சமையல், புத்தகங்கள், போட்டோ ஷூட், ஜிம் என நேரத்தை கழித்து வருகின்றனர். வரலக்ஷ்மி இதில் ஒருபடி மேலே சென்றுள்ளார்.

கடந்த மாதம் புதியதாக LIFE OF PIE என்ற பெயரில் ஒரு பேக்கிங் கம்பெனி ஆரம்பித்துள்ளார். தனது பொழுதுபோக்கான சமையலை சிறிய வியாபாரமாக மாற்றியுள்ளார். வெளிநாட்டில் தான் சாப்பிட்ட ஹொக்கைடோ சீஸ் டார்ட்ஸ் தான் இன்ஸபிரேஷனாம். நம் ஊர் பொருட்கள், தன் ஸ்டைலில் செய்துள்ளாராம் வரலக்ஷ்மி.

வெறும் பொழுதுபோக்காக ஆரம்பிக்கப்பட்ட இது இன்று பேக்கரி வடிவை எடுத்துள்ளது. இதுவரை 100 நபர்களுக்கு மேல் டெலிவரி செய்துள்ளாராம். வரலட்சுமியின் இந்த சீஸ் டார்ட்ஸ் சாப்பிட விரும்புவோர் வாட்ஸ்அப் செய்யும்பட்சத்தில் ரெடியாக செய்து வைத்து விடுவாராம்.

 

இதையும் பாருங்க:  VJ சித்ராவின் கடைசி காமெடி வீடியோ இதுதான்

கருத்தை சொல்லுங்கள் ...