வயதான பாட்டிக்கு ஆறுதல் சொன்ன குரங்கு …ஒரே நாளில் அத்தனை பேரையும் உலுக்கி எடுத்த படம்!

வயதான பாட்டிக்கு ஆறுதல் சொன்ன குரங்கின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவை பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக இந்த படம்தான் உலாவந்து கொண்டிருக்கிறது. அத்தனை பேரின் கண்கள் குளமாகி யபடி சமூகத்தின் ஒட்டுமொத்த அவலத்தையும் இந்த ஒரே படம் சுட்டிக் காட்டுவதாக உள்ளது இந்த புகைப்படம் மக்கள் மனதை படு வேகமாக இழுத்து விட்டது யார் எந்த ஊர் என்ற விவரம் இதுவரைக்கும் தெரியவில்லை ஆனால் இதை பார்க்கும் யாருக்குமே எந்த விளக்கமும் தேவைப்படாது நாட்டு நடப்பை அப்படியே புட்டு வைக்கிறது இந்த படம் அந்த பாட்டின் கண்களைப் பாருங்கள் அவரது கைகளைப் பாருங்கள் எத்தனை செய்தி எத்தனை வேதனை எத்தனை ஆதங்கம் எத்தனை எத்தனை வருத்தம் எத்தனை எதிர்ப்பார்ப்பு எத்தனை ஏமாற்றம்.

மறுபக்கம் அந்த குரங்கு அதன் உணர்வுகளை பாருங்கள் அதன் கண்களைப் பாருங்கள் அது செய்திருக்கும் விதத்தைப் பாருங்கள் உணர்ந்து அது செய்திருக்கவில்லை தான் ஆனால் அதன் தோற்றமும் அதன் இருப்பும் அந்தப் பாட்டிக்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சமாதானம் செய்வது போல ஆறுதல் சொல்வது போல உள்ளது இந்த புகைப்படம் பார்க்கும் யாருக்குமே மனதில் லேசான வழி பிறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.