“வானத்தை போல” சீரியல் ராஜபாண்டி நிச்சயதார்த்த புகைப்படங்கள்

“வானத்தை போல” சீரியல் ராஜபாண்டி நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையாயத்தில் வெளியாகி இனையாவசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றுதான் வானத்தைப்போல சீரியல். கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியலில் ஸ்ரீகுமார் , மான்யா ஆனந்த் , சங்கீதா , செந்தில்குமாரி போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் ராஜபாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் அஸ்வந்த் கார்த்தி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான,
சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானார் . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து பிரியமானவள், குலதெய்வம், கல்யாணம் முதல் காதல் வரை ,அரண்மனைக்கிளி, ரெக்க கட்டி பறக்குது மனசு போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார் . தற்போது இவர் , வானத்தைப்போல சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் 35 வயதாகும் அஸ்வந்த் கார்த்தி தன்னுடைய காதலியை விரைவில் கரம் பிடிக்க இருக்கிறார். அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களாக காயத்ரி என்பவரை,
காதலித்து வரும் அஸ்வந்த்தின் நிச்சயதார்த்தம் கடந்த 17ஆம் தேதி வீட்டிலேயே நடந்திருக்கிறது . அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் நடிகர் அஸ்வந்துக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…








