விஜய்திரைபடத்தை வைத்து பண மோசடி ; இயக்குனர் மீது வழக்கு

விஜய்திரைபடத்தை வைத்து பண மோசடி ; இயக்குனர் மீது வழக்கு

நடிகர் விஜய்திரைபடத்தை வைத்து பண மோசடியில் ஈடுபட்ட, டைரக்டர் சக்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘கோவை பிரதர்ஸ், சார்லி சாப்ளின் 2ம் பாகம், மகா நடிகன்’ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களை இயக்கியவர் சக்தி சிதம்பரம்.இவர், நடிகர் விஜய் நடிப்பில், 2011ல் வெளிவந்த ‘காவலன்’ திரைப்படத்தை வினியோகம் செய்ய, அடையாறை சேர்ந்த தொழில் அதிபர் சுந்தரிடம், 23 லட்சம் பணத்தைகடன் பெற்றார்.இந்த பணத்தை திருப்பி கொடுக்காமல், 10 ஆண்டுகளாக ஏமாற்றி வந்தார்.

இதுகுறித்து, 2020 செப்டம்பரில், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், சுந்தர் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்யாததால், நீதிமன்றத்தில் சுந்தர் வழக்கு தொடர்ந்தார்.தற்போது, நீதிமன்ற உத்தரவுப்படி, டைரக்டர் சக்தி சிதம்பரம் மீது, விருகம்பாக்கம் போலீசில், பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க:  உள்ள எல்லாம் தெரியும்படி உடையுடன் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா

Related articles