விராட் கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

விராட் கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Follow us on Google News Click Here

கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், நடிகை பிரியங்கா சோப்ராவும் இன்ஸ்டாகிராமில் பதிவுகளை இட்டு பல கோடிகளை வருவாயாக ஈட்டி வருகின்றனர் என்கிறது ஒரு தனியார் நிறுவனம். 

இன்ஸ்டாகிராமில் மதிப்புமிக்க நட்சத்திரங்களின் பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இரண்டு இந்தியர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஒருவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இந்த பட்டியலில் 23 இடம் பிடித்துள்ள கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் மதிப்பு, சுமார் ஒரு கோடியே 36 லட்சம் என்கிறது அந்த பட்டியல். பல பிரபலமான விளையாட்டு சாதனங்களை உருவாக்கும் நிறுவனங்களுடன் கைக் கோர்த்துக் கொண்டு பல போஸ்ட்டுகளை விராட் இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

 

Image result for virat kohli instagram

இந்த பட்டியலில் இருக்கும் இன்னொரு இந்தியர், நடிகை பிரியங்கா சோப்ரா. இந்த பட்டியலில் விராட் கோலியை முந்திய பிரியங்கா, 19வது இடத்தில் உள்ளார். பிரியங்கா சோப்ரா பதிவிடும் ஒவ்வொரு இன்ஸ்டா போஸ்ட்டுக்கும் அவர் வாங்கும் தொகை சுமார் ஒரு கோடியே 86 லட்சம் என கூறப்படுகிறது. பல அழகு சாதன பொருட்களை விற்கும் நிறுவனங்களுடன் கைகோர்த்து, இன்ஸ்டா போஸ்ட்டுகளை பதிவிட்டு வருகிறார் பிரியங்கா சோப்ரா.

இன்ஸ்டாகிராமில் மதிப்புமிக்க நட்சத்திரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர், அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரமான கையில் ஜென்னர். இவருடைய ஒரு இன்ஸ்டா போஸ்ட்டின் விலை, சுமார் ஒன்பது கோடி. இந்த பட்டியலில் பிரபல கால்பந்து வீரரான க்ரிஸ்டியானோ ரோனால்டோ இடம் பெற்றுள்ளார். அவரது ஒரு இன்ஸ்டா போஸ்ட்டின் மதிப்பு சுமார் 6 கோடியே 76 லட்சம். இந்த பட்டியலில் நான்காவது இடம் பிரபல மாடல் கிம் கர்தாஷியனுக்கு கிடைத்துள்ளது. அவரது ஒரு போஸ்டின் விலை 6 கோடியே 28 லட்சம் என கூறப்படுகிறது.

Image result for virat kohli instagram

சமூக வலைதளங்களில் பிரபலங்களின் போஸ்ட்டுகளும், வீடியோக்களும் மக்கள் மத்தியில் பிரபலமடைவது அதிகரித்து வருகிறது. இதை புரிந்துக்கொண்ட பல நிறுவனங்கள், பிரபலங்களை வைத்து தங்கள் பிராண்டுகளை விளம்பரப்படுத்திக் கொள்வதில் முழு வீச்சுடன் இறங்கியுள்ளன. இதனால், சமூகவலை தளங்களில் ஆக்டீவாக இருக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...