விளையாட்டுக்கு கூட அப்பாவை அடிக்காத மகளின் பாசம்

விளையாட்டுக்கு கூட அப்பாவை அடிக்காத மகளின் பாசம்

எப்போதும் மகள்களுக்கு அப்பாதான் பிடிக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

தந்தை மற்றும் மகள், தாய் மற்றும் மகனின் அன்பு என்றுமே அளவிட முடியாதது. இருவருக்கும் இருக்கும் அன்பு மற்றும் பந்த பாசத்தை வார்த்தைகளால் கூற முடியாத ஓன்று. தந்தை மகள் உறவு என்பது தற்காலத்தில் லிட்டில் பிரின்சஸ் என்று அழைக்கும் அளவிற்கு 2k-கிட்ஸின் அன்பு முன்னேற்ற மடைந்துள்ளது.

தாய் என்னதான் பார்த்து பார்த்து சமைத்தாலும் என்றாவது ஒரு நாள் மகள் சமைக்கும் உணவினை தந்தை இன்று தான் சமையல் நன்றாக உள்ளது என்று ருசி இல்லாத சமயலையும் பாராட்டுவார் தந்தை. உடன் பிறந்த சகோதரர்கள் என்னது….. என்று அதிர்ச்சி அடையும் அளவுக்கு பாராட்டுவார்.

இதே மகன் புதுமையான விஷயங்களில் ஈடுபட்டால் உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை என்று மட்டம் தட்டுவார். இது பொதுவாக அனைத்து வீடுகளிலும் நடக்கும் நிகழ்வு தான். ஒரு சில வீடுகளில் தான் விதி விலக்காக நடைபெறும். இணையத்தில் லிட்டில் பிரின்சஸ் தொல்லை தாங்க முடியவில்லை என்று சகோதரர்கள் விம்மி புலம்பும் அளவிற்கு கோலம் போடுவதில் இருந்து அவர்கள் அரங்கேற்றும் டிசைன் சப்பாத்தி சமையல் வரை லிட்டில் பிரின்சஸ் வீடுகளில் செய்யும் ஆதிக்கம் மற்றும் லீலைகள் சமூக வலைத்தளங்களில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

இது போன்ற நிகழ்வுகள் ஒரு புறம் இருக்க இங்கு ஒரு சிறுமி அதற்கு காரணம் நாங்கள் காட்டும் உண்மையான அன்பு தான் என்பது போல் உள்ளது. மகன் மற்றும் மகளுடன் கைகளை கூப்பி அடித்து விளையாடும் விளையாட்டை மகன் தந்தையுடன் முதலில் விளையாடுகிறரர். அதில் சிறுவன் அடிக்கும் போது தந்தை கையை எடுத்ததால் அவன் விளையாட்டில் தோறுபோக மகளின் முறை வரும் போது தந்தை கைகளை நீட்டுகிறார் மகள் சற்று பார்த்துக்கொண்டு கைகளை பற்றி முத்தம் இடுகிறாள். உடன்டனடியாக எழுந்து தந்தை கட்டி பிடித்து முத்தம் இடுகிறாள்.

இதையும் பாருங்க:  ரயில் பயணத்தில் படியில் நின்று சீன் போட்ட பெண்ணுக்கு என்ன நடந்தது தெரியுமா ?

தந்தையும் மகளை அணைத்தவாறே மகனையும் அணைத்து கொள்கிறார். விளையாட்டாக கூட தனது தந்தையை அடிக்க விரும்பாத சிறுமியின் செயல் அவள் தந்தையின் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்க வேண்டும் என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை நம்மால் அளவிட முடியாதது. நெகிழ வைக்கும் மகளின் தந்தை பாசத்தை கண்டு இணையவாசிகள் கண்கலங்கியுள்ளனர்.

Related articles