வேற லெவல்ல பிஸ்கட் சாப்பிடும் காக்கா என்ன ஒரு திறமை இந்த காக்காவுக்கு

வேற லெவல்ல பிஸ்கட் சாப்பிடும் காக்கா என்ன ஒரு திறமை இந்த காக்காவுக்கு

வேற லெவல்ல பிஸ்கட் சாப்பிடும் காக்கா என்ன ஒரு திறமை இந்த காக்காவுக்கு என்றும் சொல்லும் அளவிற்கு காக்கா சீரியல் வீடியோவாக இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது வைரலாக பரவி வருகிறது.

பள்ளிக்கூடத்தில் 90ஸ் கிட்ஸ்கள் காலம் தொட்டே ஒரு கதை சொல்லப்படும். அது படக்கதையாக பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றது. ஒரு காகத்தின் புத்திசாலித்தனத்தைக் காட்ட அந்த கதை வரும். அதாவது ஒரு பானையில் கொஞ்சம் தண்ணீர் இருக்கும். காகத்துக்கு குடிப்பதற்கு அது எட்டாது. உடனே அக்கம், பக்கத்தில் இருக்கும் பொடி, பொடி கல்லாக தூக்கிவந்து பானையில் போடும். இதனால் தண்ணீர் மேலே வரும். அதன்பின்னர் காகம் தண்ணீரைக் குடிக்கும். இந்தக்கதை பள்ளிக்காலத்தில் செம பேமஸ்.

அதேபோல் இப்போது ஒரு காகம் செம புத்திசாலித்தனத்துடன் நடக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அப்படி காகம் என்ன செய்தது எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ஒரு வாலிபர் ஒருவர் தன் வீட்டு மொட்டை மாடியில் காகாவுக்கு பிஸ்கட் வைத்தார். அதற்கு தவிக்குமே என பக்கத்திலேயே ஒரு சின்ன கின்னம் போன்ற தட்டில் தண்ணீர் விட்டு வைத்தார். காகம் தாகம் எடுத்தால் தண்ணீர் குடித்துக்கொள்ளும் என நினைத்துத்தான் அவர் அப்படி செய்தார்.

ஆனால் காகமோ, குழந்தைகள் டீயும், பிஸ்கட்டும் கிடைத்தால் எப்படி டீயில் முக்கி, குவர செய்து சாப்பிடுமோ அதேபோல, பிஸ்கட்டை எடுத்து அந்த தண்ணீர் இருக்கும் கின்னத்தில் போட்டு குவரச் செய்து சாப்பிட்டது. ஏதோ குழந்தைகள் செய்வதைப்போல காகம் இடை பக்குவமாகச் சாப்பிட்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதோ நீங்களே அந்த வீடியோவைப் பாருங்களேன்.

இதையும் பாருங்க:  90 வயதில் தண்ணிக்குள் இரங்கி தாத்தா செய்த செயல்

Related articles