வைகைப்புயல் வடிவேலுவின் அழகான பேலஸ் பார்த்துள்ளீர்களா?? வாங்க இங்கே சுற்றி பார்க்கலாம்!!

வைகைப்புயல் வடிவேலுவின் அழகான பேலஸ் பார்த்துள்ளீர்களா?? வாங்க இங்கே சுற்றி பார்க்கலாம்!!

Follow us on Google News Click Here

தமிழ் திரையுலகு அகராதியில் இருந்து தவிர்க்கவே முடியாத ஒரு மாபெரும் நகைச்சுவை நடிகன் வைகை புயல் வடிவேலு.மதுரையை சேர்ந்த வைகை புயல் வடிவேலு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். சரி, வைகை புயல் வடிவேலுவின் வாழ்க்கை வரலாறு குறித்து காண்போம்,

இவரின் அப்பா பெயர் நடராசன், அம்மா பெயர் சரோஜினி அம்மாள வைகை புயல் வடிவேலு தனது சிறுவயதிலிருந்தே பள்ளிக்கூடம் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து சிறு சிறு நாடகங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து அசத்துவாராம்.

இந்த சூழலில் எதிர்பாராதவிதமாக வைகை புயல் வடிவேலுவின் தந்தை மரணமடைய அவர் குடும்பம் வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டது.இதன்பின்னர் மதுரையில் புகைப்படங்களுக்கு பிரேம் மாட்டும் கடையில் வைகை புயல் வடிவேலு வேலைக்கு சேர்ந்தார்.

இந்த சூழலில் வைகை புயல் வடிவேலு ஊருக்கு பிரபல நடிகரும், இயக்குனரான ராஜ்கிரண் சென்ற போது வைகை புயல் வடிவேலுக்கு அவர் அறிமுகம் கிடைத்தது.இதையடுத்து சென்னையில் உள்ள ராஜ்கிரண் வீடு மற்றும் அலுவலகத்தில் வைகை புயல் வடிவேலு பணிபுரிந்த நிலையில் அவர் நடிப்பு திறமையை பார்த்து தனது என் ராசாவின் மனசிலே படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பளித்தார்.

அதன்பின்னர் கவுண்டமணி, செந்திலுடன் சிறுசிறு நகைச்சுவை வேடங்களில் நடித்த வைகை புயல் வடிவேலுவுக்கு பின்னர் தனியாக நகைச்சுவை நடிகராக படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.

இதையடுத்து விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை காட்டிய வைகை புயல் வடிவேலு தமிழ் திரையுலகில் நம்பர் 1 நகைச்சுவை நடிகராக ஆனார்.இவர் எழுதி நடித்த காமெடி காட்சிகளுக்காகவே ஓடிய திரைப்படங்கள் ஏராளம்.

கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் மீம்ஸ் வாயிலாக சமூக வலைதளங்களிலும் வைகை புயல் வடிவேலுவின் ராஜ்ஜியம் தான் தொடர்கிறது.வைகை புயல் வடிவேலுவுக்கு விசாலாட்சி என்ற மனைவியும், கன்னிகாபரமேஷ்வரி, கார்த்திகா, கலைவாணி என்ற மூன்று மகள்களும், சுப்ரமணியன் என்ற மகனும் உள்ளனர்.

தனது ஆரம்பகால ஏழ்மையை மறக்காத வைகை புயல் வடிவேலு தனது மகன் சுப்ரமணியனுக்கு கூரை வீட்டில் வசிக்கும் ஏழை பெண்ணை திருமணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி வாருங்கள் வைகை புயல் வடிவேலுவின் அழகான வீடடை ஒரு சுற்று சுற்றி வருவோம்

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!