வைகோவை ட்விட்டரில் விமர்சித்த சுப்பிரமணியன்சாமி!

இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அழிக்கும் நோக்குடனேயே, வைகோ மாநிலங்களவைக்கு வருவதாக, பாஜக மூத்தத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவைக்கு செல்ல உள்ள நிலையில், பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன்சாமி அவரை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், வைகோ கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்றும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிராபகரனின் சித்தாந்தத்தை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அழிக்கும் கிறிஸ்தவ அமைப்புகளின் திட்டத்துடன், வைகோ மாநிலங்களவைக்குள் நுழைவதாகவும் சுப்பிரமணியன்சாமி குற்றம் சாட்டியுள்ளார்