கொக்கி செய்யும் காகங்கள்: விலங்குகளின் பேரரசில் புதிய தொழில்நுட்ப பரிணாமம்

கொக்கி செய்யும் காகங்கள்: விலங்குகளின் பேரரசில் புதிய தொழில்நுட்ப பரிணாமம்

தொழில்நுட்பங்களில் திருப்புமுனைகளை உருவாக்கியதற்கான முதல் அடிப்படைகளை நாம் அறிந்துகொள்வதற்கு தாங்களாகவே கருவிகளை தயாரிக்கும் கலேடோனிய காகங்கள் உதவுகின்றன. பசிஃபிக்பெருங்கடலின் தெற்கு பகுதியிலுள்ள டஜன் கணக்கான தீவுகளை உள்ளடக்கியதுதான் பிரான்ஸ் நாட்டின் கீழுள்ள நியூ கலேடோனியா.

செடிகளில் இருந்து கிடைகின்ற பொருட்களை கொண்டு நியூ கலேடேனிய காகங்கள் எளிதாக கொக்கிகளை செய்கின்றன. அவற்றை பூச்சிகளின் முட்டை புழுக்கள் மற்றும் சிலந்திகளை பிடிப்பதற்கு பயன்படுத்துகின்றன. சாதாரண சிறியதொரு கிளை போன்ற மாற்று கருவியைவிட இத்தகைய கொக்கியாலான கருவிகள் 10 மடங்கு விரைவாக உணவைத் தேட உதவுகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. துருக்கியின் விசில் ‘பறவை மொழிக்கு’ ஆபத்து வெளிச்சத்திற்கு வந்தது டோடோ ராட்சத பறவையின் ரகசிய வாழ்க்கை! இந்த கொக்கிகளின் செயல்திறனை அளவிட்டு, இந்த கருவி பரிணமித்து வருகின்ற தகவல்கள் சிலவற்றை விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்கு மேலாக, விலங்குகளின் பேரரசில் புதிய தொழில்நுட்ப பரிணாமத்தின் முதல் தருணத்தை பற்றி விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இவர்களின் ஆய்வு முடிவுகள் எல்லாம் “நேச்சர் எக்காலஜி மற்றும் எவலூசன்” சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. கொக்கிகளை உருவாக்கிக்கொள்ள தெரிந்த ஒரே இனமாக இந்த காகங்கள் இருக்கின்றன. சுமார் 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், முற்கால மனிதர்கள் மீன்பிடி கொக்கிகளை தயாரித்தது, மிகவும் முக்கியமான தொழில்நுட்ப திருப்புமுனையாக அமைந்தது. ஜப்பானின் ஒகினவா தீவிலுள்ள ஒரு குகையில் சிப்பியில் செதுக்கப்பட்ட கொக்கிகளை அகழ்வாய்வின்போது கண்டுபிடித்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள், இத்தகைய முற்கால “கடல்சார் தொழில்நுட்பம்” தீவுகளில் மனிதர்கள் உயிர்வாழ உதவியது என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் பாருங்க:  11 வயது சிறுமியின் ஆப்பிள் ஐபோன் தீப்பிடித்து எரிந்துள்ளது! காரணம் தெரியுமா?

காகம் மீன்பிடிப்பு பற்றிய நம்முடைய கண்டுபிடிப்புகள் மிகவும் சமீபத்திய, 1000 தலைமுறைகளுக்கு உட்பட்டது. பரிணாம முறைகளில் இது கண்டு கொள்ளப்படவில்லை. இந்த 1000 தலைமுறைகளுக்குள் மீன்பிடி கொக்கி உருவாக்கத்தில் இருந்து விண்கலன்களை அனுபவது வரை மனிதர்கள் முன்னேறியிருப்பதை பார்க்கிறபோது, உண்மையிலேயே மிகவும் பெரிய வளர்ச்சியாக தெரிகிறது. கருவிகள் செய்வதற்கு காகங்களை தூண்டியவை எவை என்பதை புரிந்து கொள்வது, தனித்தன்மையான மற்றும் மதிப்புக்குரிய மனிதர் செய்யாத ஒரு கருவியை கொண்டு, மனிதரின் முன்னேற்றத்தில் அத்தகைய அடிப்படை முன்னேற்றத்தின் தோற்றம் ஏற்பட்டது பற்றி ஆராய்வதற்கு முடிந்தது. இந்த காகங்கள் கொக்கியுடைய கருவிகளை செய்வதை பார்க்கின்றபோது, ஒரு தொழில்நுட்பம் பரிணமித்து வளர்கின்ற தருணத்தை பார்க்கிறேன்” என்று பேராசிரியர் ருட்ஸ் கூறுகிறார்.

வாட்ஸ் ஆப் வணிக செயலி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை உலகின் முதல் தொடுவுணர்வுடைய செயற்கை கை முற்கால மனிதர்களின் கருவி பயன்பாடு பற்றி ஆய்வு செய்கின்ற ஜெர்மனியிலுள்ள உர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுற்றுச்சூழலியல் ஆர்வலர் ஜுயன் லாபுயன்டே என்பவர், காகங்கள் இந்த கருவி தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் பண்பு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்திருக்கிறார். “சின்னஞ்சிறிய விலங்குகள் கூட கருவிகளை தயாரித்து கொள்ளுவதற்கு போதுமான அறிவுக்கூர்மையோடும் உள்ளன என்பதையும், சில வேளைகளில் நம்முடைய முன்னோரைவிட அவை சிறந்து விளங்கின என்பதையும் நாம் பணிவுடன் ஏற்றுத்தான் ஆகவேண்டும்” என்கிறார் அவர். காகங்கள் தயாரிக்கும் கருவிகளின் எதிர்கால வளர்ச்சி பற்றி அனுமானித்தால், இந்த கொக்கிகளை செய்வதோடு பறவைகளின் “கதை முடிந்துவிடுகிறது” என்று நினைக்கவில்லை என்று பேராசிரியர் ருட்ஸ் கூறுகிறார். “இந்தப் பறவை இனம் இன்னும் சிறந்த கருவிகளை தயாரிக்கும் என்று எண்ணுகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

இதையும் பாருங்க:  கணக்குகளை நீக்கும் ட்விட்டர் : உங்கள் கணக்கை பாதுகாப்பது எப்படி ?