ஏன் தோத்தீங்க..? பிசிசியின் அந்த 7 கேள்விகள்… வசமாக மாட்ட போகும் ரவி சாஸ்திரி, கோலி

ஏன் தோத்தீங்க..? பிசிசியின் அந்த 7 கேள்விகள்… வசமாக மாட்ட போகும் ரவி சாஸ்திரி, கோலி

மும்பை:

கேப்டன் கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரிடம் உலக கோப்பை தோல்வி குறித்து கேட்கப்பட வேண்டிய கேள்வி பட்டியலுடன் பிசிசிஐ காத்துக் கொண்டிருக்கிறது. இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியது. கிரிக்கெட் ரசிகர்களால் எளிதில் ஜீரணிக்க முடியாத தோல்வி இது. அணியில் உள்ள கருத்து வேறுபாடுகள், வீரர்களிடையே பிளவு என ஒட்டுமொத்த குளறு படிகளும் வெளியில் வர ஆரம்பித்து இருக்கின்றன. இந்நிலையில், தோல்வி குறித்து கேப்டன் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் விசாரணை நடத்த பிசிசிஐ முடிவு செய்திருக்கிறது. வருங் காலத்தில் எப்படி செயல்படுவது என்று ஆலோசனை கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. பின்னுக்கு சென்ற இந்திய அணி..

உலகக் கோப்பை தோல்வியால் நேர்ந்த அதிர்ச்சி.. சுதாரிக்க வேண்டும்! 7 கேள்விகள் தயார் அதே நேரத்தில் ரவி சாஸ்திரி மற்றும் கோலியிடம் பல கேள்வி கணைகளை தொடுக்க பிசிசிஐ தயாராகி வருகிறது. அதற்கான கேள்விகளையும் தயாரித்து வைத்திருக்கிறது பிசிசிஐ. முக்கியமாக 7 கேள்விகளை வைத்திருக்கிறது. முடிவுகளை எடுத்தீர்களா? அதில் முக்கியமாக கிடுக்கிப்பிடி கேள்வியாக ஒரு கேள்வியை வைத்திருக்கிறது பிசிசிஐ. அந்த கேள்வி இதுதான்…

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 7வது இடத்தில் தோனியை களம் இறக்க காரணம் என்ன ? மேலும் வீரர்களுடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவுகளை எடுத்தீர்களா ? 4வது இடம் யாருக்கு? இல்லை..

தனிப்பட்ட முறையில் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் என்ற அடிப்படையில் இந்த முடிவுகளை எடுத்தீர்களா ? என்ற கேள்வி கேட்கப்பட உள்ளது. அது தவிர, ஒன்றரை ஆண்டுகளாக 4வது இடத்திற்கு அம்பத்தி ராயுடுவை தயார் செய்து உலக கோப்பை தொடரில் அவரை கழற்றிவிட்டது ஏன்? கேள்வியும் பட்டியலில் உள்ளது.

இதையும் பாருங்க:  ஆஸ்திரேலியா தொடரில் இருந்து ஜடேஜா விலகல் - இந்திய அணிக்கு பின்னடைவு

விஜய் சங்கர் விவகாரம் உலக கோப்பை புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா, அரை இறுதியில் தோற்றதற்கு என்ன காரணம் ? மிடில் ஆர்டரில் விஜய் சங்கர் காயம் அடைந்த போது தொடக்க வீரரான மயங்க் அகர்வாலை தேர்ந்தெடுக்க காரணம் என்ன ? அந்த வீரர்கள் யார்? 4ம் நிலை வீரரை உறுதி செய்யாமல் உலக கோப்பை தொடரில் சென்றதற்கு என்ன காரணம் ? இந்திய அணியில் சிறப்பாக செயல்படாத வீரர்கள் யார் யார் ? என்ற கேள்விகளும், அடுத்த வருடம் நடக்கும் உலகக்கோப்பை டி20 போட்டிக்காக அணியின் திட்டம் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட உள்ளன.

Related articles