24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உயர்வு

24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு  உயர்வு

24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உயர்வு

புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 742417 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 22752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 482 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20642 ஆக உயர்ந்திருக்கிறது.
இதுவரை 456831 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 16883 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல மருத்துவமனைகளில் 264944 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 217121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 118594  பேருக்கும், டெல்லியில் 102831 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் பாருங்க:  மாணவிக்கு வகுப்பறையில் தாலிகட்டிய மாணவன் : நண்பன் எடுத்த வீடியோவால் வந்தது வினை - வீடியோ