45 வயதானவரை கல்யாணம் செய்த இளம்பெண்

பொதுவாக 90-ஸ் கிட்ஸ்-களுக்கு பெண் கிடைப்பது இல்லை என்று, சமூக வலைத்தளங்களில் கிண்டல் பதிவு-கள் உலா வந்த வண்ணம் உள்ளது.
இத்தகைய நிலையில் 45 வயதான ஒருவரை, 25 வயது இளம்பெண் கல்யாணம் செய்த சம்பவம் கர்நாடகத்தில் அரங்கேறி உள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மேகனா (வயது 25). இவருக்கும் ஒரு வாலிபருக்கும் கடந்த 3 ஆண்டு-களுக்கு முன்பு கல்யாணம் நடந்து இருந்தது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டு-களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற மேகனாவின் கணவர் மாயமாகி விட்டார். அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் மேகனா தனியாக வாழ்ந்து வந்தார். மேலும் தனிமையாக இருப்பதை உணர்ந்த மேகனா 2-வது கல்யாணம் செய்யவும் முடிவு செய்தார். இந்த நிலையில் மேகனாவுக்கும், சிக்கதனேகுப்பே கிராமத்தில் வசிக்கும் சங்கரண்ணா (45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் மேகனா, சங்கரண்ணாவை கல்யாணம் செய்ய விரும்பினார். இதற்கு சங்கரண்ணாவும் சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று சக்கதனகுப்பே கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து எளிமையாக கல்யாணம் நடந்தது. இதில் இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் சங்கரண்ணா-மேகனா ஆகியோரின் கல்யாண புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்தவர்-கள் மேகனாவுக்கு ஆதரவாக பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்-கள். மேலும் வயதானவரை கல்யாணம் செய்ததாக மேகனாவுக்கு எதிராகவும் கருத்து கூறி வருகிறார்-கள்.