அற்புதமாக தப்பாட்டம் இசைத்து அசத்திய சிறுவன்

அற்புதமாக தப்பாட்டம் இசைத்து அசத்திய சிறுவன் ஒருவனின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

‘தப்பு’என்னும் இசைக்கருவியினை இசைத்து ஆடப்படும் ஆட்டம் என்பதால் தப்பாட்டம் என்று அழைக்கப்படுகிறது. இக்கலையினைப் ‘பறையாட்டம்’ என்றும் அழைப்பர். இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் கோயில் நிகழ்ச்சிகளிலும், வாழ்க்கை வட்டச் சடங்குகளிலும், அரசியல் பிரசாரங்களிலும் தப்பாட்டம் இசைக்கப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் வழக்கிலிருந்தாலும் தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் இதனை இசைத்து வருகின்றனர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், கல்லூரி மாணவர்களும் இக்கலையினைப் பயின்று நிகழ்த்தி வருகின்றனர், ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட இக்கலையினைத் தற்போது பெண்களும் பயின்று ஆடுகின்றனர்.
தமிழகம் கலை மற்றும் பொழுது போக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இயல், இசை மற்றும் நாடகம் என வகைப்படுத்தப்பட்ட மூன்று பொழுதுபோக்கு முறைகள் தெரு கூத்து போன்ற கிராமப்புற நாட்டுப்புற அரங்கில் வேர்களைக் கொண்டிருந்தன.
குழு மற்றும் தனிப்பட்ட நடனங்களின் பல வடிவங்கள் அதில் சில நடன வடிவங்கள் பழங்குடி மக்களால் நிகழ்த்தப்படுகின்றன இவை போன்ற நடனங்களில் பெரும்பாலானவை இன்றும் தமிழ்நாட்டில் செழித்து வளர்கின்றன.
அதிலும் மிகவும் பரவலாக இருந்த நாட்டுப்புற பாட்டு மற்றும் நடனம் இந்த காலகட்டத்தில் அழிந்துகொண்டே வருகின்றனர், தமிழர் பண்பாடை காப்பாற்ற விதமாக இவர்களை போல் ஆட்கள் மூலம் அவ்வப்போது வளர்ந்து வருகின்றது ,இதோ அந்த அழகிய தப்பாட்டம்…