நாய் உயிரை காக்க தன் உயிரை பணையம் வைத்த வாலிபர்!! மனித நேயம் இன்னும் சாகவில்லை என்பதற்கான சாட்சி!

நாய் உயிரை காக்க தன் உயிரை பணையம் வைத்த வாலிபர்!! மனித நேயம் இன்னும் சாகவில்லை என்பதற்கான சாட்சி!

Follow us on Google News Click Here

‘மனம் இருந்தால் புளிய மரத்தின் இலையில் கூட இருவர் அமரலாம்’ என்பது பழமொழி. ஆனால் இன்று காலமாற்றத்திலும், நாகரீகம் என்னும் பெயரிலும் மனிதநேயம் காவு கொடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் இங்கொன்றும், இங்கொன்றுமாக மனித நேயம் மிகுந்த மனுசர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒருவரைப் பற்றிய செய்தி தான் இது!

பொதுவாகவே நாய்கள் மிகவும் நன்றியுள்ளவை. தன்னை வளர்கும் எஜமானருக்கு ஒரு ஆபத்து என்றால் தன் உயிரையே பணயம் வைத்து நாய்கள் அவர்களைக் காக்கும். இங்கே ஒரு வாலிபர் தெருநாயைக் காப்பாற்ற தன் உயிரையே பணயம் வைத்திருக்கிறார்.

டேம் ஒன்றின் மேல்பகுதியில் நின்று கொண்டிருந்த நாய் ஒன்று தவறுதலாக டேமுக்குள் விழுந்தது. டேமின் மேல்பகுதியில் இருந்து சறுக்கியவாறே கீழே வந்தது அந்த நாய். டேமில் இருந்து தண்ணீர் வேறு பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. இதனால் நாய் தண்ணீர் சூழலில் சிக்கிக் கொண்டது.

யதார்த்தமாக டேமுக்கு சுற்றுலா வந்திருந்த வாலிபர் ஒருவர் இதைப் பார்த்ததும், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் டேமுக்குள் இறங்கிவிட்டார். அவர் தன் உயிரையே பணயம் வைத்து அந்த நாயை கஷ்டப்பட்டு போராடிக் கரைக்கு _கொண்டு வந்தார்.

அதில் விசேசம் என்னவென்றால், அந்த நாய் டேமுக்குள் சிக்கிய நிலையிலும் தன்னைக் காப்பாற்ற வந்த வாலிபரை முழுவதுமாக நம்பி அவர் செய்யும் செயல்களுக்கு எல்லாம் ஒத்துழைக்கிறது. இதோ நீங்களே இந்த மனித நேயப்பண்பாளரைப் பாருங்களேன். சிலிர்த்திடுவீர்கள். இதோ உங்களுக்காக அந்தக் காட்சி..

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!