குஞ்சுகளிடம் அழகாக ஆங்கிலத்தில் பேசும் தாய்கிளி!

குஞ்சுகளிடம் தாய் கிளி ஒன்று அழகாக ஆங்கிலத்தில் பேசும் ஒரு வீடியோ இணையத்தில் இன்று வைரலாகி வருகிறது. அந்த கிளி அழகாக ஆங்கிலத்தில் பேசி அசத்தியுள்ளது.

கிளிகள் அழகாகப் பேசும் என்பது நமக்கு தெரியும் ஆனால் அது எஜமானர்கள் சொல்லும் வார்த்தைகளை அவர்களிடம் தான் பேசும். ஆனால் இங்கு ஒரு கிளி தனது குஞ்சுகளிடம் அருமையாக அழகாக ஆங்கிலத்தில் உரையாடுவது இதனை அந்த கிளியின் உரிமையாளர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இணையவாசிகள் அதனை பகிர்ந்து தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த கிளியை பாராட்டி வருகின்றனர் இணையவாசிகள். எப்போதும் மனிதர்களுடன் இணக்கமாக வாழ கூடிய உயிரினம் கிளி என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் பார்க்கும் அந்த வீடியோ கீழே உள்ளது