உலக அளவில் நீச்சல் போட்டியில் பல பதக்கங்களை வென்ற நடிகர் மாதவன் மகனின் அழகிய புகைப்படங்கள்
உலக அளவில் நீச்சல் போட்டியில் பல பதக்கங்களை வென்ற நடிகர் மாதவன் மகனின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.
நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்.ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கிறவர்.1996 ஆம் ஆண்டு ஹிந்தி படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.

இதனை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார் .இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழ் படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.

இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு தொடர் வெற்றியை பெற்றுக்கொடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வந்தார்.இவர்க்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் தான் அதிகம் உள்ளனர்

இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு,கன்னடம் ,ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து அசத்தியுள்ளார்.தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற படத்தினை எடுத்துள்ளார்.

இப்படத்தில் இவருடன் சிம்ரன் நடித்துள்ளார்.விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து இப்படத்தினை உருவாக்கியுள்ளார் மாதவன்,இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இவர் மகனும் தற்போது நீச்சலில் சாதனை புரிந்து வருகிறார்,பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை அள்ளி வருகிறார்,தற்போது இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
