நடிகையாக இருந்து பின் ஆசிரியையாக மாறிய நடிகை தேவயானியின் குடும்ப புகைப்படங்கள்
நடிகையாக இருந்து பின் ஆசிரியையாக மாறிய நடிகை தேவயானியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.
90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை உருவாக்கியவர் இவர்.

இவர் சினிமாவில் பெங்காலி படத்தில் நடித்து அறிமுகமாகியவர்,பெங்காலியில் இரண்டு படங்கள் நடித்த பிறகு மலையாளத்தில் படம் நடிக்க தொடங்கிவிட்டார் தேவயானி.

இவருக்கான வரவேற்பு எந்த மொழி சினிமாவிலும் கிடைக்கவில்லை ,அந்த நேரத்தில் தான் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு வந்தது.தொட்டால் சிணுங்கி என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார் இவர்.

இப்படத்திற்கு பின்னர் 1996 ஆம் ஆண்டு இவர் அஜித்திற்கு ஜோடியாக காதல் கோட்டை படத்தில் நடித்தார்,இப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்று ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது என்றே சொல்லலாம்

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மிகப்பெரிய முன்னணி நடிகையாக சினிமாவில் உருவெடுத்தார் தேவயானி.

இவர் பிரபல இயக்குனர் ராஜகுமாரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்,இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

இவர் தனது மகள்கள் மற்றும் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

