அழகாக பாடும் அற்புத குழந்தை

அழகாக பாடும் அற்புத குழந்தை

Follow us on Google News Click Here

சின்னச்சிறு குழந்தைகள் எதை செய்தாலும் அழகாகத்தான் இருக்கும் . வீட்டில் குழந்தைகள் இருந்தால் நேரம் எப்படி போகிறது என்றே தெரியாது. அதிலும் இந்த கொரோனா காலத்தில் வீட்டில் குழந்தைகள் இருந்தவர்களுக்கு இது கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

குழந்தையும் தெய்வமும் ஓன்று என்பார்கள் . குழந்தைகளின் உலகம் எப்போதுமே சந்தோஷமானதாகவே இருக்கும். அதனால் தான் ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள்.அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள்.

குழந்தைகளின் செய்யும் செயல் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். அதிலும் பிஞ்சுக்குழந்தைகள் எதை செய்தாலும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். இங்கே ஒரு பிஞ்சுக்குழந்தையின் செயலும் அப்படித்தான் நம்மை வெகுவாக ஈர்க்கிறது. அந்தவகையில் ஒரு குட்டிக்குழந்தை ஐங்கிரி நந்தினி எனத் தொடங்கும் சாமிப்பாடலை மிக அழகாகப் பாடுகிறது. மூன்று வயதுகூட முழுதாக நிரம்பாத அந்தக் குழந்தை மிக அழகாக இடைவிடாது அந்தப்பாடலை பாடுவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 லட்சம் பேர் வியந்து பார்த்துள்ள இந்த வீடியோவுக்கு 3 ஆயிரம் கமெண்ட்களும் வந்துள்ளது. இதோ நீங்களே இந்த பிஞ்சுக்குழந்தையின் குரலை கேளுங்கள். அசந்துதான் போவீர்கள் .

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...