இப்படி ஒரு அண்ணன் யாருக்கும் கிடைக்க மாட்டார்கள்

இப்படி ஒரு அண்ணன் யாருக்கும் கிடைக்க மாட்டார்கள்

எப்போதுமே சகோதரர், சகோதரி பாசத்தை வார்த்தைகளால் அளவிட முடியாது. இளைய தளபதி விஜய் நடிப்பில் திருப்பாச்சி படத்தில் தன் சகோதரி மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் சகோதரிகளின் மீது உயிரையே வைத்திருக்கும் சகோதரர்கள் நம்ம நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சகோதரர்களுக்கு அம்மாவாக மாறிப்போகும் சகோதரிகளும், சகோதரிகளுக்கு அப்பாவாக மாறிப்போகும் சகோதரர்களும் இங்கு அதிகம். வளர்ந்த பின்பு தங்கள் சகோதரிக்கு பார்த்து, பார்த்து வரன் தேடும் இடத்தில் சகோதரர்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து மிளிர்கின்றனர். சகோதரர்களின் பாசம் அந்தவகையில் அளவிட முடியாது.

இங்கேயும் அப்படித்தான். தன் சகோதரிக்கு நல்ல வரன் பார்த்து திருமணம் நடத்துகிறார் சகோதரர். தொடர்ந்து சகோதிரி தன் மாப்பிள்ளை வீட்டுக்கு செல்வதை நினைத்து கதறி அழுகிறார் சகோதரர். இதை அண்ணனின் நண்பர் ஒருவர் செல்போனில் படம் எடுக்க அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனாலும் இப்படி ஒரு பாசக்கார சகோதரர், சகோதரி இந்த காலத்திலுமா? என திருமணத்துக்கு வந்தவர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினர்

இதையும் பாருங்க:  நீங்க உண்மையில் வில்லேஜ் விஞ்ஞானி தான் பா… இதுக்கு கூடவா கருவியா? என்ன செஞ்சிருக்காங்கனு பாருங்க..!

Related articles