கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே பாடலுக்கு மணப்பெண்ணின் வேற லெவல் டான்ஸ்

கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே பாடலுக்கு மணப்பெண்ணின் வேற லெவல் டான்ஸ்

Follow us on Google News Click Here

கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே பாடலுக்கு மணப்பெண்ணின் வேற லெவல் டான்ஸ் வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்பெல்லாம் திருமணம் என்றாலே சிறுவர்-சிறுமிகள் ஆடை அதனை உற்றார் உறவினர்கள் பார்த்து மகிழ்ந்து ரசிப்பார்கள். மேலும் உறவினர்கள் அனைவரும் அமர்ந்து பேசி காலத்தை போக்குவார்கள். ஆனால் இப்போதெல்லாம் திருமணம் என்றாலே மணமக்களை மண மேடையில் ஆடுவதும் பாடுவதும் என்று களைகட்டுகிறது. மணமக்கள் ஆடாவிட்டால் அதற்காகவே சில குழுக்களை ஏற்பாடு செய்யும் வழக்கமும் வந்துவிட்டது. அந்த வகையில் இணையத்தை ஆக்கிரமித்த அந்த வீடியோவில் மணப்பெண் லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படத்தில் இருந்து கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா என்ற பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடி உறவினர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த மணப்பெண் நடனத்தை பாராட்டி ஒரு தரப்பினரும் விமர்சித்து மற்றொரு தரப்பினரும் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

நீங்கள் பார்க்க வந்த வீடியோ கீழே உள்ளது…

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...