நடராஜன் கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள்

நடராஜன் கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிரபலங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இனியவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தை சேர்ந்த பிரபலமான இந்திய கிரிக்கெட் அணி வீரர் தான் நடராஜன். இவரின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி.

இவர் IPL தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பிடித்து தனது யாக்கர் பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.

இதனால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணியில் நெட் பௌலராக இடம் பிடித்தார்.

அதன் பிறகு பிரதான வீரர்களில் ஒருவராக இடம் பிடித்த இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மூன்று வகையான போட்டிகளிலும் அறிமுகமாகி சிறப்பாக விளையாடினார்.

குறிப்பாக இவரின் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நிலையில் பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

அதன் பிறகு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடித்த இவர் முழங்கால் காயம் காரணமாக 2021 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார்.

கடந்த ஐபிஎல் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி மாபெரும் சாதனை படைத்தார். இவர் அடுத்த வருடம் நடைபெறும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு விளையாட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே சில நாட்களுக்கு முன்பு நடராஜன் தன்னுடைய கிராமத்தில் தனது பெயரில் ஒரு கிரிக்கெட் மைதானத்தை தொடங்கியுள்ளார்.

நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் ‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ என்ற பெயரில் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார். இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த மைதானம் திறப்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, விஜயசங்கர், நடிகர் யோகிபாபு, நடிகர் புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நடராஜன் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.