cook வித் கோமாளி புகழ் பவித்ராவின் மரண குத்தாட்டம் – வீடியோ

எப்போதும் வெள்ளித் திரையில் வரும் நடிகர், நடிகைகளுக்குத்-தான் அதிக அளவில் ரசிகர் பட்டாளம் இருந்தது. ஆனால் இப்போது தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை. இதனால் சின்னத் திரையில் வந்தாலும் அதிகமான ரீச் இருக்கிறது.
அதிலும் விஜய் தொலைக்காட்சியில் சின்னதாக தலையை காட்டினால் கூட எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக காமெடி நிகழ்ச்சிகளில் அறிமுகமான சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் ஆகியோர் இன்று திரைத்துறையில் உச்சத்தில் உள்ளனர்.
சந்தானமும் விஜய் தொலைக்காட்சியில் வந்த லொள்ளு சபா மூலம் பிரபலமானவர் தான். அந்தவகையில் இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் செம பேமஸ். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலம் ஆனவர் தான் பவித்ரா.

பல குறும்படங்களில் நடித்து வந்த இவர் ட்ரம்ப்ஸ் இசைக்கு செம குத்தாட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது