காதலியை திருமணம் செய்துகொண்ட CSK வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் யின் அழகிய திருமண புகைப்படங்கள்

காதலியை திருமணம் செய்துகொண்ட CSK வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் யின் அழகிய திருமண புகைப்படங்கள்

காதலியை திருமணம் செய்துகொண்ட CSK வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் யின் அழகிய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.

image-4906760

மும்பை: சென்னை அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தனது நீண்ட நாள் காதலியான உட்கர்ஷா பவாரை திருமணம் செய்துகொண்டுள்ளார். தம்பதியினரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

image-3456213

சிஎஸ்கே அணியின் எதிர்கால கேப்டனாக பார்க்கப்பட்டு வரும் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், இந்த ஐபிஎல் சீசனில் மட்டும் 590 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். சென்னை அணிக்காக சிறப்பாக ஆடிவரும் இவர், விரைவில் இந்திய அணியின் தொடக்க வீரராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் அதிரடியான ஆட்டத்தால் சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

image-6704688

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக இந்திய அணி மாற்று வீரர்களில் ஒருவராக ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் திடீரென ருதுராஜ் கெய்க்வாட் விலகியதால், அந்த வாய்ப்பு யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வழங்கப்பட்டது. அதேபோல் ரசிகர்கள் மத்தியில் ருதுராஜ் விலகியதற்கு என்ன காரணம் என்ற கேள்வியும் எழுந்தது.

image-4222500

இதையடுத்து மகாராஷ்டிராவைச் சேர்ந்த உட்கர்ஷா பவார் என்பவரையும் ருதுராஜ் திருமணம் செய்ய உள்ளது தெரிய வந்தது. இறுதிப்போட்டியின் போது சென்னை அணி வீரர்களுடனான கொண்டாட்டத்தில் உட்கர்ஷா பவாரும் கலந்து கொண்டிருந்தார். இறுதியாக கோப்பையுடன் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியை சந்தித்து தனது எதிர்கால மனைவியுடன் ருதுராஜ் கெய்க்வாட் வாழ்த்து பெற்றிருந்தார். இதையடுத்து இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தது தெரிய வந்தது.

home1-1685851872-4404259

இதனால் யார் இந்த உட்கர்ஷா பவார்? என்று சிஎஸ்கே ரசிகர்களிடையே கடுமையான விவாதம் நடந்தது. அதில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த உட்கர்ஷா பவார், கிரிக்கெட் வீரராவார். 11 வயது முதலே கிரிக்கெட் விளையாடி வரும் உட்கர்ஷா பவார், மகாராஷ்டிரா அணிக்காக ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் கடந்த 18 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து உட்கர்ஷா விலகி இருந்து வருகிறார். புனே பல்கலைக்கழகத்தில் ஃபிட்னெஸ் தொடர்பாக படித்து வருவதால் உட்கர்ஷா பவார் கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார்.

ani-20230603180606-down-1685851899-6269671

இந்த நிலையில் நேற்று ருதுராஜ் கெய்க்வாட் – உட்கர்ஷா பவார் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் சென்னை அணியின் சிவம் துபே, பிரசாந்த் சொலங்கி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் பலரும் சமூக வலைதளங்களில் புதிய தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே திருமண புகைப்படங்களை ருதுராஜ் கெய்க்வாட் நேற்றிரவு ட்விட்டரில் பகிர்ந்த நிலையில், அவருக்கு ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்