வித்தியாசமான முறையில் 6 ஜெண்டை மேளத்தை ஒரே நேரத்தில் அடித்து அசத்திய இளைஞர்

வித்தியாசமான முறையில் 6 ஜெண்டை மேளத்தை ஒரே நேரத்தில் அடித்து அசத்திய இளைஞரின் வீடியோ காட்சி ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி தற்போது செம வைரலாகி வருகிறது.

இன்றைய வாலிபர்கள் அதீத திறன்யுடையவர்களாக இருக்கிறார்கள். இப்போதெல்லாம் யாருக்குத் திறன் இருக்கிறது என்பதே யாராலும் கணிக்க முடியாத விசயம் ஆக இருக்கிறது. இங்கே ஒரு பொடியனின் திறன் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.
பொதுவாகவே கேரளத்தின் ஜெண்டை மேளத்துக்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஜெண்டை மேளம் ஊர்கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் போது அனைவருமே சொக்கிப் போவது உண்டு. கேரள பாரம்பர்யக் கலையான இதில் முதலில் ஆண்கள் மட்டுமே மேளம் இசைத்தும், ஆடியும் வந்தனர். ஆனால் இப்போது எல்லாம் மகளிர்கள் மட்டுமே பிரதானமாக இருக்கும் ஜெண்டை மேளக் குழுக்கள் எல்லாம் வந்துவிட்டன.
இங்கே ஒரு வாலிபர் கேரள பாரம்பர்ய இசைக்கருவியான ஜெண்டை மேளத்தை வாசிக்கிறார். ஆனால் அவர் அதில் செய்த புதுமை மிக அதிகம். அந்த வாலிபர் ஒரே நேரத்தில் ஏழெட்டு ஜெண்டை மேளத்தை வைத்துக்கொண்டு ஒரே குச்சியால் அவர் தனி ஒருவராக செம க்யூட்டாக அடித்து அசத்துகிறார். இதோ நீங்களே இதைப் பாருங்களேன். இந்த வாலிபனின் திறன்யைக் கண்டு ஆச்சர்யப்பட்டு போவீர்கள்!