வெளிநாடு செல்லும் கணவனை வழியனுப்ப வந்த இடத்தில் மனைவியின் பாசப்போராட்டம் ..

வெளிநாடு செல்லும் கணவனை வழியனுப்ப வந்த இடத்தில் மனைவியின் பாசப்போராட்டம் ..

தமிழில் கல்லானாலும் கணவன்… புல்லானாலும் புருசன் என்ற பழமொழி உண்டு . அதிலும் தமிழ்ப் பெண்களுக்கு கணவர் மீது பாசம் அதிகம்.

தற்போதும் நம்நாட்டில் பொதுவாக கிராமப் பகுதிகளில் கணவரின் பெயரைக் கூட மனைவி சொல்வதில்லை. இதுபோல் ஒருமுறை கணக்கு எடுக்க வந்த அதிகாரி கணவர் பெயரைக் கேட்க, கொண்டையில் வைக்கிறது.. கோயிலில் அடிக்குரது என சொன்னாள் பெண் ஒருத்தி. அதிகாரி குழம்பிப் போக, பக்கத்து வீட்டு பெண்மணி பூமணி தான் அவள் வீட்டுக்காரர் பெயர் என்று சொன்னதாக சொல்வார்கள்.. இதையும் நாம் கேள்வி பட்டிருப்போம் .

அந்த அளவுக்கு நம்நாட்டு பெண்களுக்கு கணவர் மீது எப்போதும் பாசம் அதிகம். இங்கும் அப்படித்தான். தனது கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல அவரை வழியனுப்ப குடும்பத்தோடு விமான நிலையம் வந்துள்ளார் மனைவி .

ஆனால் அங்கு அவரால் குடும்பத்தார் போல் சகஜமாக இருக்க முடியவில்லை. அவர் உடைந்து அழுகிறார் . அதைப் பார்த்த கணவரும் அழுகிறார் .இதை பார்த்து விமான நிலையத்தில் அவர்கள் நின்ற பகுதியே சோகத்தில் மூழ்கியது. இதே போலத்தான் நம் நாட்டில் பல பெண்களும்… வெளிநாட்டு வேலைக்கு செல்லும் கணவரை வழியனுப்பி விட்டு அந்த நேரத்தில் கண்ணீர் மழையில் நனைந்து போவார்கள்…

இந்த விடியோவை பாருங்கள்…உங்கள் வாழ்விலும் இப்படி ஒரு சந்தர்ப்பம் இருந்திருக்கலாம் …

Related articles

error: Content is protected !!