இறந்த குட்டிக்கு மனிதர்களை போல இரங்கல் தெரிவிக்கும் குரங்கு கூட்டம்

இறந்த குட்டிக்கு மனிதர்களை போல இரங்கல் தெரிவிக்கும் குரங்கு கூட்டம்

மனிதர்கள் இறந்த வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவிப்பது குரங்குகளும் இரங்கல் தெரிவிக்கும் காட்சி ஓன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

மனிதர்கள் இறந்த வீட்டிற்கு சென்று அவரது உறவினர்களை கட்டி அணைத்து ஆரத்தழுவி ஆறுதல் சொல்லுவது வழக்கம். ஆனால் இந்த விஷயம் குரங்குகளும் செய்கிறது என்றாள் நம்ப முடிகிறதா அப்படி ஒரு வீடியோதான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

அந்த வீடியோவில் ஒரு குட்டி குரங்கு இறந்த நிலையில் இருக்கிறது அதனை பார்த்த மற்ற குரங்குகள் அதனை தூக்கி பார்த்து அது இறந்து உள்ளது என்பதை உணர்கிறது. உடனே அங்கு இருக்கும் எல்லா குரங்குகளும் ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி ஆறுதல் தெரிவிக்கின்றன. இதைப் பார்க்கும்போது குரங்குகளும் இதுபோன்று செய்கின்றனர் என்பது தெரிகிறது இதனை பார்த்து இணையவாசிகள் மனமுருகி அதனை பகிர்ந்து வருகின்றனர் இதனால் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் உண்மையில் அந்த குட்டி குரங்கு காமெரா பொருத்தப்பட்ட பொம்மை என்பது அந்த குரங்குளுக்கு தெரியவில்லை .

இதையும் பாருங்க:  50 வருடம் குளிக்காதவர் குளித்த 30வது நாளில் இறந்த சோகம்

கருத்தை சொல்லுங்கள் ...