காதலுக்கு கண்ணில்லை என்பதை நிஜவாழ்க்கையில் நிரூபித்த காதல் ஜோடி

காதலுக்கு கண்ணில்லை என்பதை நிஜவாழ்க்கையில் நிரூபித்த காதல் ஜோடி

காதலுக்கு கண்ணில்லை என்பதை நிஜவாழ்க்கையில் நிரூபித்த காதல் ஜோடியின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது அனைவராலும் பார்க்கப்பட்டு வைரலாக பரவி வருகிறது.

‘காதல்’ என்பது நம்முடைய வாழ்க்கையின் ஒரு அர்த்தம் என்று சொல்வார்கள். அனால் இப்பொழுது எல்லாம் பணம் மட்டும் தான் வாழ்க்கையின் அர்த்தம் என்ற நடைமுறை வந்து விட்டது. மனிதர்கள் பணத்தையும் காதலையும் ஒரே தராசில் வைத்து அளப்பதால இந்த நிலை உருவாகிறது.

அது இரண்டுமே வேறு, காதல் என்பது நம் சுவாசிக்கும் மூச்சு, ஆனால் பணம் என்பது ஒரு தேவை மட்டுமே.இதை புரிந்தால் வாழ்வு நன்றாக இருக்கும். ஆனால் இந்த காலத்தில் காதலுக்கு மரியாதையை கொடுப்பதில்லை.

இந்த நிஜத்தை பொய்யாக்கும் விதமாக ஒரு காதல் ஜோடியின் அளவில்லாத காதலின் வீடியோ வெளியாகி உள்ளது. இதை பார்க்கும் போது இந்த காலத்திலும் இந்த மாதிரி அருமையான காதல் உள்ளதா என்று தோன்றுகிறது. இதை பார்க்கும் மக்கள் இவர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோ அதிக அளவிலும் பகிர்கிறார்கள் . இந்த வீடியோ உங்களுக்காக…

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

One thought on “காதலுக்கு கண்ணில்லை என்பதை நிஜவாழ்க்கையில் நிரூபித்த காதல் ஜோடி

  1. இந்தக் காணொளிக்குக் குவிகிற ஒவ்வொரு வாழ்த்துக்குப் பின்னாலும் இருப்பது அவர்கள் இருவரும் பார்வையற்றவர்கள் என்கிற பரிவு மட்டுமே. வாழ்த்திய எவரும் சிந்திக்காத அல்லது தவறவிட்ட கோணம் ஒன்று உண்டு. அதாவது, இந்தக் காணொளியைப் படம் பிடித்தவர் அவர்களின் முன் அனுமதி பெறவில்லை. எத்தனை பெரிய வன்முறை இது. கருத்துப்பெட்டியில் ஒரே ஒருவர் மட்டும் அதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
    பார்வையற்றவர்களைப் புகைப்படமோ காணொளியோ எடுப்பதென்றால், நீங்கள் முதலில் அவர்களின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என்பதே அறம் சார்ந்த தார்மீகம். உண்மையில் இதுதான் சமத்துவப் பார்வையாக இருக்க முடியும். பரிவெல்லாம் நான் ஒரு படி மேலே என்பதன் குறியீடுதான்.
    தவிர, காதல் என்கிற உணர்வு அகம் சார்ந்தது. அது என்னவோ பார்வையற்றவர்களின் காதலை மட்டும் காதலுக்குக் கண்ணில்லை என்று மொக்கையான மேற்கோளுடன் வேடிக்கைப் பார்த்துப் பத்துபேருக்குக் காட்டிப் புலகாங்கிதம் அடைவதில் பொதுச்சமூகத்துக்கு அப்படி என்னதான் மகிழ்ச்சியோ? .
    எங்களுக்குக் கண்தான் இல்லை. உடல், மனம், உணர்ச்சி எல்லாம் இருக்கத்தானே செய்கிறது. “பாருங்கள் இவர்களும் காதலிக்கிறார்கள்” என்று ஏதோ வேற்றுக் கிரகவாசிகளைச் சுட்டுவதுபோல் சுட்டுகிற கற்கால மனிதர்களை நினைத்தால், சிலசமயம் சிரிப்பும், சிலசமயம் ஆத்திரமாகவும்தான் வருகிறது. சே சே

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்