கதிருக்காக ஓன்று சேர்ந்த அண்ணன் தம்பிகள்.. வெளியானது புதிய ப்ரோமோ

கதிருக்காக ஓன்று சேர்ந்த அண்ணன் தம்பிகள்.. வெளியானது புதிய ப்ரோமோ

கதிருக்காக ஓன்று சேர்ந்த அண்ணன் தம்பிகள்.. வெளியானது புதிய ப்ரோமோ வெளியாகி இனையத்தில் வைரலாக பரவி வருகிறது .

1-73

விஜய் டிவியில்  நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஒற்றுமை இருந்த அண்ணன் தம்பிகள் தற்போது பிரிந்து ஆளுக்கொரு திசையில் இருக்க,  எவ்வாறு ஒன்றிணைவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோ வீடியோவில்  கண்ணன் வீட்டிற்கு பேங்க் ஆஃபீஸர்ஸ் மீண்டும் வந்து பிரச்சனை பண்ணுகின்றனர். அவர்கள் “நாங்கள் உங்களுக்கு தந்த டைம் முடிந்து விட்டது. இனி என்ன பண்ணலாம்? உன் பொண்டாட்டிய தூக்கலாம்” என்று கூறி ஐஸ்வர்யாவை தொட போகின்றனர். அவர்களை  கண்ணன் கோபத்துடன் தடுக்க கண்ணனை போட்டு வீட்டிற்குள்ளே அடிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கண்ணனை அடிப்பது பார்த்து ஐஸ்வர்யா அழுதப்படி அவர்களை தடுக்க போக  கஸ்தூரி அவரை மடக்கி பிடித்துக் கொள்கிறார்.

பிறகு நடந்த விஷயங்களை அறிந்து கண்ணனுடன் வரும் கதிர் அந்த ஆபிசர்களை சந்தித்து “எங்க வந்து பொம்பிளைகளையா தப்பாக பேசுறீங்க..? இன்னொரு வாட்டி உங்களை என் தம்பி வீட்டில் பார்த்தால் தொலைச்சிடுவேன்” எனக் கூறி அவர்களை போட்டு அடிக்கின்றார்.

இதனை தொடர்ந்து மூர்த்தி வீட்டுக்கு வரும் போலீஸ் பாங்க் ஆளுங்களை அடித்ததற்காக உன்னை அரெஸ்ட் பண்ணுறோம் எனக் கூறி கதிரை அழைத்துச் செல்கின்றனர். அதனைப் பார்த்த முல்லை “அவங்களுக்கு எதுவும் தெரியாது விட்டிடுங்க சார்” எனக் கூறியபடி அவர்கள் பின்னாடியே சென்று கதறி அழுகின்றார்.

விவரங்கள் அனைத்தையும் அறிந்து கோபமடையும் மூர்த்தி எல்லாத்துக்கும் முதற்காரணம் கண்ணன் தான் என்று அவரை திட்டுவதோடு, கதிர் ஜெயிலில் இருப்பதால் வளைக்காப்பு ஃபங்சனும்  நின்று விடுகிறது. இதனால் கடுப்பாகும் ஐஸ்வர்யா கதிர் மாமா எதுக்கு அந்த ஆபீஸர்களை அடிக்கணும் ., அதனால தான் என்னுடைய வளைகாப்பும் நின்றுவிட்டது! அதை வெச்சி எவ்வளவு பிளான் போட்டிருந்தேன் என்று பேச விருக்கிறார். எனவே இனி வரும் எபிசோட்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்குள் பெரும் பிரச்சனைகளும், திருப்பங்களும் ஏற்படும் என எதிர்பார்க்கபடுகின்றன.

இதையும் பாருங்க:  கீழே விழுந்த ஐஸ்வர்யா!! காசு இல்லாமல் தவிக்கும் கண்ணன்... பதறவைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்