வாலிபங்கள் ஓடும்..வயதாகக் கூடும்.. ஆனாலும் நட்பு மாறாதது! கிராமத்து ஆச்சிகளின் நட்பைப் பாருங்க.. இப்படி ஒரு வாழ்க்கை சொர்க்கம் தான்…

வாலிபங்கள் ஓடும்..வயதாகக் கூடும்.. ஆனாலும் நட்பு மாறாதது! கிராமத்து ஆச்சிகளின் நட்பைப் பாருங்க.. இப்படி ஒரு வாழ்க்கை சொர்க்கம் தான்…

வாலிபங்கள் ஓடும்..வயதாகக் கூடும்.. ஆனாலும் நட்பு மாறாதது! என்பதுபோல் இரண்டு பாட்டிகளின் நட்பு குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளை கவர்ந்து வைரலாகி வருகிறது.

பள்ளியில், ஏன் நம்மோடு அக்கம், பக்கத்து வீட்டுக்களில் விளையாடிய நட்பு காலம் முழுவதும் மறக்க முடியாது. கால ஓட்டத்தில் தனித்தையே வாழ்க்கைப் பாதை மாறிவிட்டாலும், பார்த்ததும் உரிமையோடு பேச, கோபப்பட முடியக்கூடிய உறவு இதுதான்!

ஒவ்வொரு வீட்டிலும் வயதானோர் இருப்பது வரம். அவர்கள் தான், நம்மை சிறப்பாக வழிநடத்துவார்கள். அதிலும் தாத்தா, ஆச்சிகளோடு வளரும் பேரக்பிள்ளைகள் மிகவும் பொறுப்புடன் வளர்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க தாத்தா, ஆச்சிகள் அருமை இன்றைய தலைமுறைக்கு தெரிவதில்லை. அதனால்தான் பிள்ளைகள் தங்கள் தாத்தா, ஆச்சியின் பரிட்சயம் இல்லாமல் வளர்கின்றன. அவர்களுக்கு அதனால் அன்பென்னும் பெரும் உலகும் கிடைப்பதில்லை.

தாத்தா, ஆச்சிகள் பேசுவட்தைக் கேட்கவே மிகவும் இனிமையாக இருக்கும். அதிலும் அவர்கள் அவர்களது நெடுங்கால நண்பர்களைப் பார்த்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.

இதோ இங்கேயும் அப்படித்தான். நாஞ்சில் நாட்டு ஆச்சிகள் இருவர் பேசிக்கொள்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை கிராமத்தை சேர்ந்த இருஆச்சிகள் யதார்த்தமாக சந்தித்துக் கொள்கின்றனர்.

அப்போது எங்க போற என ஒரு ஆச்சி கேட்கிறார். அதற்கு வெள்ளந்தியாக அழகாக பேசுகிறார் அந்த ஆச்சி. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்…

இதையும் பாருங்க:  தனது முட்டைகளை காக்க போராடும் தாய் புறா