விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியின் கடைசி திரைப்படமான மாமன்னன் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள்
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியின் கடைசி திரைப்படமான மாமன்னன் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவனரத் உதற்போது செம வைரலாக பரவி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும்,நடிகராகவும் வலம் வருபவர்.தயாரிப்பாளர் ஆன இவர் முதல் முறையாக இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகம் ஆகினார்.

இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று தந்தது.இந்த வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக படங்கள் நடிக்க தொடங்கினார் உதயநிதி.

பல வெற்றி படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவை கலக்கியுள்ளார்.தற்போது அரசியலில் களம் இறங்கி அதிலும் வெற்றியை பெற்று ஆல் ரவுண்டர் ஆக கலக்கி வருகிறார்.

இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து அண்மையில் வெளியாகிய நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த உதயநிதி தற்போது சீரியசான கதாபாத்திரங்களில் களம் இறங்கி வெற்றியும் கண்டு வருகிறார்.அதேபோல் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தினை தயாரித்து நடித்தும் உள்ளார்

தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் இனி படங்கள் நடிக்கப்போவதில்லை மக்கள் பணியில் ஈடுபட போவதால் மாமன்னன் படம் தான் கடைசி படம் என அறிவித்திருந்தார்.

இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் நேற்று இப்படத்தின் இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது

கமல்ஹாசன்,சிவகார்த்திகேயன்,கவின் என பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது