மஞ்சள் நீராட்டு விழா மேடையில் ஆட்டம் போட்ட இளம் பெண்

மஞ்சள் நீராட்டு விழா மேடையில் ஆட்டம் போட்ட இளம் பெண்

நம்ம ஊர் பெண்களுக்கு வாழ்வில் நடக்கும் மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று மஞ்சள் நீராட்டு விழா. சடங்கு என்னும் பெயரில் கிராமப் பகுதிகளில் இந்த விழா விமர்சையாக கொண்டாடுகிறார்கள்.

மஞ்சள் நீராட்டுவிழாவை பொறுத்தவரை மக்கள் மத்தியில் இருவிதமான கருத்துகள் நிலவுகிறது. ஒரு பிரிவினர், அதை காதும், காதும் வைத்ததுபோல் வீட்டுக்குள் முடித்து விடலாமே ? அதை ஏன் இவ்வளவு பிரமாண்டமாக நடத்த வேண்டும் எனக் கூறுவோரும் உண்டு. அதேநேரம், வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள் என்பதையும் அவள் கல்யாணத்துக்கு தயாராகிவிட்டாள் என்பதையும் ஊருக்கும், உறவுக்கும் உணர்த்தும் சடங்கு தான் மஞ்சள்த நீராட்டுவிழா எனச் சொல்வோரும் உண்டு.

அந்தவகையில் இங்கே, ஒரு பெண்ணுக்கு ஊர், சொந்த பந்தங்களைத் திரட்டி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இதில் சடங்கு நடக்க இருந்த பெண் தாராளபிரபு படத்தில் இடம்பெற்ற ‘பாக்கு வெத்தலை மாத்த இப்போ நேரம் வந்திருச்சு’’ பாடலுக்கு செம ஆட்டம் போடுகிறார். சும்மா எனர்ஜிட்டிக்காக இருக்கும் அந்த நடனத்தை இதுவரை 50 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

இதையும் பாருங்க:  3 கிராமத்து பெண்களின் மாஸான ஆட்டம்

Related articles