உலகத்தில் எவ்ளோ செடி இருந்தும் சாலையின் நடுவே செவ்வரளி ஏன் நடுறாங்கன்னு தெரியுமா? இதுல இவ்ளோ விசயம் இருக்கா…

உலகத்தில் எவ்ளோ செடி இருந்தும் சாலையின் நடுவே செவ்வரளி ஏன் நடுறாங்கன்னு தெரியுமா? இதுல இவ்ளோ விசயம் இருக்கா…

சாலையின் நடுவே செவ்வரளி ஏன் நடுறாங்கன்னு தெரியுமா? என்பதை விளக்கும் செய்தி ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

நெடுஞ்சாலை பயணம் செய்பவர்கள் இடையில் ஆங்காங்கே செவ்வரளி செடிகள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதன் வாசனை மூக்கைத் துளைக்கும். அதைப் பார்ப்பதற்கே ரொம்பவும் அழகாக இருக்கும்.

சாலையின் நடு, நடுவே செவ்வரளிச் செடியை நட்டுவைப்பதன் பின்னால் மிகப்பெரிய அறிவியலே இருக்கிறது. சாலையோரத்தில் அதிகமான வாகனங்கள் சென்றுகொண்டே இருக்கும். இந்த வாகனத்தின் புகையில் கார்பன் நச்சுக்கழிவு அதிகளவு இருக்கும்.

இதை காற்றில் உறிஞ்சி தூய ஆக்சிஜனாக திருப்பிக்கொடுக்கும் பண்பு தாவரங்களுக்கு எல்லாவற்றுக்குமே உண்டு. இது செவ்வரளிக்கு இன்னும் கூடுதலாக இருக்கும். இதன் இலைகளின் அடர்த்திதான் இதற்குக் காரணம். இது காற்றில் உள்ள கார்பன் கழிவை எளிதில் உள்வாங்கும்.

செவ்வரளி பொதுவாகவே வறண்ட பகுதிக்கு ஏற்ற தாவரமாகும். இதனால் யரும் தண்ணீர் ஊற்றி பராமரிக்கவேண்டிய அவசியம் இல்லை. மண் அரிப்பைக் கட்டுப்படுத்துவதிலும், இரைச்சல் மாசுவை கட்டுப்படுத்துவதிலும் செவ்வரளி முக்கியப்பங்கு வகிக்கிறது இது வாகனத்தின் முகப்பு விளக்கு எதிரேவரும் வாகனத்தில் படராமலும் தடுக்கிறது.

பொதுவாக செவ்வரளி இலைகளை ஆடு, மாடு என எதுவும் சாப்பிடாது. அழகு மட்டுமே பிரதானம் என்பதால் செவ்வரளியை விறகுக்கும் ஒடிக்க மாட்டார்கள் என்பதால் தான் நெடுஞ்சாலை ஓரங்களில் செவ்வரளி மட்டுமே நிற்கிறது.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்