பிரியாங்காவுக்கு கடைசி நேரத்தில் உடல் நலக்குறைவு

பிரியாங்காவுக்கு கடைசி நேரத்தில் உடல் நலக்குறைவு

இதனை நாள் அவ்ளோ உற்சாகத்துடன் ஒட்டுமொத்த சீசனையும் தாங்கிப் பிடித்து வந்த பிரியாங்காவுக்கு கடைசி நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஹாஸ்ப்பிட்டல்யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது புரமோவில் பிரியாங்கா இடம்பெறாத நிலையிலேயே ரசிகர்கள் பிரியாங்காவுக்கு என்ன ஆச்சு என சந்தேகங்களை கிளப்பினர். இந்நிலையில், எபிசோடில் தெளிவாக பிரியாங்காவுக்கு உடல் நிலை சரியில்லை என்றும் அவர் ஹாஸ்ப்பிட்டல்யில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் காட்டப்பட்டது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஈரமான ரோஜாவே 2 மற்றும் செந்தூரப்பூவே சீரியல்களில் இருந்து நடிகர்கள் வருகிறார்கள். அந்த நிகழ்ச்சியை பிரியாங்கா மற்றும் ராஜு ஹோஸ்ட் பண்ண வேண்டும் என கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து பிக் பாஸ் கூறினார். இருவரும் அதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், பிரியாங்கா இருக்காரே அப்புறம் ஏன் புரமோவில் வரவில்லை என ரசிகர்கள் யோசித்தனர்.

கன்ஃபெஷன் ரூமில் இருந்து வெளியே வந்த நிலையில், உடை மாற்றும் அறையில் அழுது கொண்டிருந்தார் பிரியாங்கா. அவருக்கு என்ன ஆச்சு என ராஜு கேட்க, உடம்பு முடியல தொடை பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது என பிரியாங்கா சொல்ல சொல்ல ரசிகர்கள் சங்கடத்தில் ஆழ்ந்தனர்.

இன்னும் 3 நாள் தான் முடிச்சுட்டு வெளியே போய் ஸ்கேன் எடுத்துக்குறேன்னு பிரியாங்கா ரொம்பவே ஃபீல் பண்ணி ராஜுவிடம் சொல்ல மீண்டும் கன்ஃபெஷன் ரூமுக்கு பிரியாங்காவை அழைத்தார் பிக் பாஸ். ராஜுவை தவிர பிரியாங்காவுக்கு உடல் நலம் சரியில்லை என்பதை அறிந்து மற்ற யாருமே ஏன் ரியாக்‌ஷன் செய்யவில்லை என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் பாருங்க:  ஆமை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பிரம்-மிக்க வைக்கும் காணொளி

கன்ஃபெஷன் ரூமில் பிக் பாஸ் அழைத்த நிலையில், ஒரு கவரில் சில உடைகளை எடுத்துக் கொண்டு மருத்துவனைக்கு கிளம்பி விட்டார் பிரியாங்கா. அச்சச்சோ பிரியாங்கா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போறாரே விஜய் டிவி பயங்கரமாக பிளான் பண்ணி அனுப்பிடுச்சா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி எதிர்பார்த்த மாதிரியே முடிந்து விடும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எந்தவொரு கனெக்ட்டும் இல்லாமல் போய்விடும் என்பதற்காக ஃபேக்காக ஒரு சீனை க்ரியேட் பண்ணி பிரியாங்காவை மெடிக்கல் செக்கப்பிற்காக அனுப்பி உள்ளனர் என்றும் சில நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிரியாங்காவுக்கு ஒண்ணும் ஆகவில்லை என்றும் நாளையே மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்து விடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒருவேளை சிம்பதி ஓட்டுக்களை குவிக்க இப்படியொரு முயற்சியா? அல்லது விஜய் டிவியின் பிளான் என்ன என்பதை பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.