திருமண பந்தியில் மணமக்கள் செய்த ரொமான்ஸ

திருமண பந்தியில் மணமக்கள் செய்த ரொமான்ஸ

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் கல்யாணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.

கல்யாண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

இதனால் இப்போதெல்லாம் கல்யாண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர்.

அதிலும் கல்யாண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோவாகவும் எடுத்து மேரேஜ் வீடியோ கவரேஜில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் இந்த மணமக்கள் நடனத்திற்கும் பெரிய வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் அதையெல்லாம் ஓவர்டேக் செய்யும் விதத்தில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. கல்யாண வீட்டில் தாலி கட்டி முடிந்து மாலை நேரம் நடக்கும் ரிசப்ஷன் வீடு அது. அப்போது, அங்கு மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் அருகருகே இருந்து சாப்பிடுகிறார்கள்.

அப்போது, கல்யாணப் பொண்ணு மாப்பிள்ளை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது அவருக்கே தெரியாமல் மெதுவாக அவர் இலையில் இருந்து அப்பளத்தை எடுத்து சாப்பிடுகிறார். பதிலுக்கு மாப்பிள்ளையும் அதேபோல் கல்யாணப் பொண்ணு கவனிக்காமல் இருக்கும்போது அப்பளத்தை எடுத்துச் சாப்பிடுகிறார்.

குறித்த இந்த இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், பொண்ணு, மாப்பிள்ளை இருவருமே சாப்பாட்டு பிரியர்களாக இருப்பார்கள் போலயே! என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.

இதையும் பாருங்க:  பிச்சைக்காரரிடம் மூ.க்குடைபட்ட டீக்கடைக்காரர்