சிம்பு பட பாடலுக்கு புனிதா ஷாலினி போட்ட செம டான்ஸ்

சிம்பு பட பாடலுக்கு புனிதா ஷாலினி போட்ட செம டான்ஸ்

சிம்பு பட பாடலுக்கு புனிதா ஷாலினி போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

ஏற்கனவே இந்த ஜோடி போட்ட நடனங்கள் மிகவும் பிரபலம். அதே ஜோடி கல்லூரி விழாவில் போட்ட நடனம் தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த பச்சை நிற தாவணியில் நடனமாடுவது புனிதா ஷாலினி. இவரது நடனத்திற்கு இணையத்தில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அதேபோல் உடன் ஆடும் வர்மன் என்பவருக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடனம் ஆடும் அனைத்து வீடியோக்களும் இணையத்தில் வைரலாக வது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இவர்களது நடனத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் அவர்களை பாராட்டி கருத்துக்களைப் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் இருவரும் திருநெல்வேலி சித்த மருத்துவக் கல்லூரியில் படித்த டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்கள் வீடியோ வைரல் ஆவதை தொடர்ந்து டாக்டர் வர்மன் புது பக்கத்தை உருவாக்கு அதில் அவர்களது நடன வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். அனைத்து வீடியோக்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

error: Content is protected !!