கைக்குழந்தையுடன் இரண்டு பேருந்துகளுக்கு நடுவே சிக்கிக் கொண்ட தம்பதி!
கைக்குழந்தையுடன் இரண்டு பேருந்துகளுக்கு நடுவே சிக்கிக் கொண்ட தம்பதியின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

விபத்து என்பது தவிர்க்க இயலாத ஒன்று என்பது தெரிந்ததுதான். விமானத்தில் பறந்ததால் மட்டுமே விபத்து ஏற்படும் என்றும், ரயிலில் பயணித்ததால் விபத்து ஏற்பட்டுவிடும் என்றும் சொல்லிவிட இயலாது. நடந்து போகும்போதுகூட விபத்து நேரிடலாம்.
தரைவழிப் போக்குவரத்தில் தரைப் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட சாலைகளில் நடக்கக் கூடிய விபத்து சாலை விபத்து எனப்படுகிறது. சாலையில் செல்லும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியோ அல்லது சாலையின் ஓரங்களிலுள்ள மரம் அல்லது கட்டிடங்களில் மோதியோ பெரும்பான்மையான சாலை விபத்துக்கள் நடக்கின்றன. விபத்தின் காரணங்களாக வாகனத்தின் வடிவமைப்பு, வாகனம் செலுத்தப்பட்ட வேகம், சாலையின் தரம், சாலையின் வடிவமைப்பு, சுற்றுப்புறச் சூழ்நிலை, வாகன ஓட்டியின் ஓட்டுதல் திறன் மற்றும் வாகன ஓட்டியின் நடவடிக்கை ஆகியவற்றைக் கூறலாம்.
விபத்தைத் தடுக்கும் முகமாக வேகக் கட்டுப்பாடு போன்ற பல்வேறு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுகிறது.