இயற்கை பட நடிகை யின் புகைப்படங்கள் வைரல்
இயற்கை பட நடிகை யின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

ராதிகா குமாரசாமி, தமிழ்த் திரைப்படங்களில் ராதிகா என்றும் குட்டி ராதிகா என்றும் அழைக்கப்படுபவர். ஒரு இந்திய நடிகை ஆவார். அவர் முதன்மையாக கன்னட படங்களில் தோன்றினார். 2003 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான இயற்கை படத்தில் கதாநாயகியாக தோன்றினார் குட்டி ராதிகா. சினிமாவில் இருக்கும் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வதை போல இவரும் முன்னாள் கன்னட மாநில முதல்வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2006 ஆம் ஆண்டு எச்டி குமாரசாமி தனது இரண்டாவது மனைவியாக குட்டி ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷாமிகா கே. சுவாமி என்ற மகள் உள்ளார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 494, இந்து தனிநபர் சட்டத்தின் கீழ் திருமணச் சட்டத்தை மீறியதற்காக இந்தத் திருமணம் சட்டப்பூர்வ ஆய்வுக்கு உட்பட்டது. ஆனால், போதிய ஆதாரம் இல்லாததால் கர்நாடக உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. அவர் இயற்கை படத்தில் நடித்ததை தொடர்ந்து வர்ணஜாலம், மீசை மாதவன், உள்ள கடத்தல் போன்ற சில தமிழ் படங்களில் நடித்தார்.

அதன் பின் தமிழில் தொடர்ந்து பட வாய்ப்பு அதிகம் வராததால் கன்னட அவர் தொடர்ந்து தனது நடிக்க ஆரம்பித்தார். கன்னடத்தில் இவர் நடிப்பில் ஏராளமான படங்களில் உள்ளன. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்து விட்டார்.

அவர் தனது இணையதள பக்கத்தில் தனது குடும்ப புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரும் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் சேர்ந்து இருக்கும் போட்டோ தற்போது அந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
