முதல்தடவை தன் தங்கையை பார்க்கும் அண்ணன் வீடியோ

முதல்தடவை தன் தங்கையை பார்க்கும் அண்ணன் வீடியோ

சகோதர சகோதரி பாசம் வார்த்தைகளால் எப்போதுமே அளவிடவே முடியாது. திருப்பாச்சி படத்தில் நடிகர் இளைய தளபதி விஜய், தன் சகோதரி மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் சகோதரிகளின் மீது உயிரையே வைத்திருக்கும் சகோதரன்கள் நம்ம ஊரிலும் பலபேர் இருக்கின்றனர்.

சகோதரன்க-ளுக்கு அம்மாவாக மாறிப்போகும் சகோதரிகளும், சகோதரி-களுக்கு அப்பாவாக மாறிப்போகும் சகோதரன்களும் இங்கு அதிகம். வளர்ந்த பின்பு தங்கள் சகோதரிக்கு பார்த்து, பார்த்து வரன் தேடும் இடத்தில் சகோதரன்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து மிளிர்கின்றனர். சகோதரன்களின் பாசம் அந்தவகையில் அளவிட முடியாது.

இங்கேயும் அப்படித்தான். தன் அம்மா கருவுற்ற நாள் முதல் பிறக்கப் போகும் குழந்தைக்காக காத்து இருந்தார் ஒரு குட்டிப்பையன். இந்நிலையில் தாய்க்கு குழந்தையும் பிறந்தது. அந்தக்குழந்தையை இந்தக் குட்டிப்பையனின் மடியில் கொண்டுவந்து கொடுக்க, அவன் தன் சகோதரியின் முகத்தையும், தலையையும் பாசத்தோடு தடவுகிறார். அப்போது அந்த பொடியனின் ரியாக்சனைப் பார்க்கணுமே..அப்படியே பாசம் தளு, தளுக்கிறது. இதோ நீங்களே அந்தக்காட்சியைப் பாருங்கள்.

இதையும் பாருங்க:  திருமணமேடையில் பெண்களுடன் மாப்பிள்ளை செய்த காரியம்